Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDTV Public opinion சித்தராமையா Vs பசவராஜ் பொம்மை: கர்நாடகாவின் "மக்கள் முதல்வர்" யார்? பரபர சர்வே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியே ஆட்சியை தக்க வைத்து கொண்டது என்ற சாதனையை இந்த 2023 தேர்தலில் பெறுவோம் என பாஜக நம்பியிருந்த நிலையில் அது நடக்குமா என்ற சந்தேகத்தை கிளப்புவது போல் உள்ளது பொது மக்களின் கருத்துகள்.

கர்நாடகா சட்டசபைக்கு வரும் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

NDTV Public Opinion: Who will be Karnatakas most favourite Chief minister?

கர்நாடகா வரலாற்றில் 38 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளாத நிலையில் இந்த முறை அந்த சாதனையை செய்வோம் என பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முதல்படியாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி, யுகாதி மற்றும் தீபாவளி பண்டிகை வரும் மாதங்களில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து வார்டுகளிலும் குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு, சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் உடனே வெளியேற்றப்படுவர் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளுக்கு சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்ற அளவுக்கு காங்கிரஸும் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் 200 யுனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளோமா முடித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த நிலையில் என்டிடிவி பொதுமக்களிடம் கருத்து கணிப்புகளை எடுத்துள்ளது. லோக்நிதி மையத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பில் கர்நாடகா மக்களுக்கு எந்த முதல்வரை பிடிக்கும் என கேட்கப்பட்டது. அதில் சித்தராமையா முதல்வராக வர 40 சதவீத மக்களும், தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையை மிகவும் பிடிக்கும் என 22 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

15 சதவீதம் மக்கள் கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியே எங்களுக்கு பிடித்தமான முதல்வர் என தெரிவித்துள்ளனர். அது போல் கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமாரை தங்களுக்கு பிடித்த முதல்வராக 4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அது போல் வயது வரம்பால் முதல்வர் பணியிலிருந்து விலகிய பி.எஸ். எடியூரப்பாதான் எங்களுக்கு பேவரைட் என 5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

NDTV Public Opinion: Who will be Karnatakas most favourite Chief minister?

18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சித்தராமையாவுக்கு 40 சதவீதம் பேரும் பசவராஜ் பொம்மைக்கு 28 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அது போல் 56 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் பிடித்தமான முதல்வர் யார், யார் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 44 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு் 22 சதவீதம் பேர் பசவராஜ் பொம்மைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

75 வயதுடைய சித்தராமையாவை இளைஞர்களை விட முதியவர்களே விருப்பமான முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பொம்மைக்கு அப்படியே நேர்எதிர். பசவராஜ் பொம்மை முதல்வராக வர வேண்டும் என முதியவர்களை விட இளைஞர்கள் விரும்புகிறார்கள். இவர்களில் சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 2006 ஆம் ஆண்டு இணைந்தார்.

2010 இல் பாஜக பிரமுகர்களான ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் குறித்து நடவடிக்கை கோரி பெல்லாரி வரை பேரணி நடத்தினார் சித்தராமையா. இதன் மூலம் கட்சியில் தனது இருப்பை ஸ்டிராங்காக நிலை நாட்டினார். பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை அரசியல்வாதியான சித்தராமையா கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து முதல்வரானார். காங்கிரஸ் கட்சியின் சாதனை முதல்வர்களில் இவரும் இடம் பெற்றார்.

அது போல் 2021 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பிஎஸ் எடியூரப்பா வயது வரம்பு அடிப்படையில் பதவி விலகிய போது பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது காங்கிரஸ் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை விதித்த போதிலும் இந்த தேர்தலில் பொம்மையையே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. எனவே இந்த என்டிடிவி நடத்திய ஓபினியன் போல் படி கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகிறாரா இல்லை மற்ற கருத்து கணிப்புகள் சொல்வது போல் தொங்கு சட்டசபை ஏற்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+