Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுக்கான நகரம் பெங்களூர்.. இங்கு இருப்பதே வேஸ்ட்.. நொய்டா தான் பெஸ்ட்.. சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நொய்டாவில் வசித்து வந்த ஒருவர் சமீபத்தில் பெங்களூருக்கு குடியேறி இருக்கிறார். இரு நகரங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கி அவர் பதிவிட்டுள்ள ஒரு ரெட்டிட் பதிவு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் பெங்களூர் மிக மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், இது இணையத்தில் மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

பொதுவாக இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப் பெங்களூரை சொல்வார்கள். அந்தளவுக்கு நாடு முழுக்க இருந்து பல்வேறு ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் தான் இருக்கிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பெங்களூர் வருகிறார்கள். இருப்பினும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெங்களூர் ஏற்றதாக இருப்பதில்லை.

bangalore Noida india

பெங்களூர்- நொய்டா

சமீபத்தில் நொய்டாவிலிருந்து பெங்களூர் குடிபெயர்ந்த ஒரு கார்ப்பரேட் ஊழியர், பெங்களூர் மிக மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். தான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்ட அந்த நபர், பெங்களூரில் உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதாகவும் போக்குவரத்து நெரிசலும் கூட அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நொய்டாவில் இருந்ததாகவும் மாதம் ரூ.30 ஆயிரம் ஊதிய உயர்வு கிடைத்ததால் பெங்களூர் வர ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

பெங்களூர் வந்து 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் தவறு செய்துவிட்டோமோ என வருந்துவதாகக் குறிப்பிடுகிறார். மோசமான சாலைகள் மற்றும் மோசமான போக்குவரத்தைக் கொண்ட பெங்களூர் அசுத்தமாகவும் ஒழுங்கமைக்கப்படாமலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தண்ணீரின் தரம் மோசமாக இருப்பதாகவும் ஜன நெருக்கடியும் அதிகம் எனக் குறிப்பிடுகிறார். நொய்டாவை விட்டு வெளியேறியதற்கு மிக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன் பதிவு

இது தொடர்பாக அவர் தனது ரெட்டிட் தளத்தில், "நான் என் பட்ட படிப்பை முடித்த பிறகு, நொய்டாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்தேன். நெய்டாவின் உள்கட்டமைப்பு, அதன் பன்முகத்தன்மை காரணமாக நான் அந்த நகரத்தை மிகவும் விரும்பினேன். கம்பெனி மாற முடிவு செய்தபோது முதலில் என்சிஆர் பகுதிக்குள் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு மாறவே முதலில் திட்டமிட்டேன். ஆனால், அப்படிச் செய்தால் பல வாய்ப்புகளை இழப்பேன் என்பதால் பிறகு நாடு முழுக்க வேலைகளைத் தேடினேன்

வடக்கு vs தெற்கு

நான் நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ.30,000/மாதம் ஊதிய உயர்வுடன் பெங்களூரில் வேலை கிடைத்தால் அங்கு நான் குடிபெயர்ந்தேன் (இந்த ஊதிய உயர்வுக்காக மாற தகுதியான நகரம் பெங்களூர் இல்லை என்பதாலேயே துல்லியமாக எவ்வளவு ஊதிய உயர்வு கிடைத்தது என்பதைச் சொல்கிறேன்). இப்போது பெங்களூரில், நகரம் அசுத்தமாக உள்ளது, ஒழுங்கமைக்கப்படவில்லை.. இங்குச் சாலைகள் மோசமாகவும் போக்குவரத்து நிறைந்தும் இருக்கிறது. மோசமான நீர், ஜனநெருக்கடியும் அதிகம் இருக்கிறது. வடக்கு vs தெற்கு என்ற மனநிலையும் அதிகம் இருக்கிறது.

ரொம்ப மோசம்

நொய்டாவில் எந்தவொரு இடத்திலும் அதிக கூட்டம் இருக்காது. ஆனால், பெங்களூர் அதற்கு நேர் எதிராக இருக்கிறது. நொய்டாவை விட்டு வெளியேறியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். எனவே நொய்டாவிலிருந்து பெங்களூர் வர யாராவது திட்டமிட்டால் சிறிது நேரம் ஒதுக்கி இங்கு வருவது சரியான முடிவு தானா என்பதை யோசியுங்கள். காற்று மாசை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வேலை செய்ய மிகச் சிறந்த இடமாகப் பெங்களூர் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் மிகப் பெரிய விவாதமாகவே மாறியுள்ளது. ஒரு தரப்பினர் அவர் சொல்வது சரி தான் என்கிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் வேண்டும் என்றே பெங்களூர் மீது வன்மத்தைக் கக்க இதுபோல பதிவிட்டுள்ளதாகவும் எல்லா நகரங்களிலும் சில பிரச்சினைகள் இருக்கவே செய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+