டிரைவரே இல்லை.! வெளிநாட்டிற்கு இணையாக கலக்கும் நம்ம பெங்களூர்.. தெறிக்கவிடும் zPod.! வாவ் செம
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் பல வினோத சம்பவங்களுக்குப் பெயர் போனவை... அப்படி அங்கே நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
டிரைவரே இல்லாமல் திடீரென நடுரோட்டில் ஒரு வாகனம் வந்தால் நாம் பதறித் தான் போவாம். ஆனால், நவீனத் தொழில்நுட்பங்கள் இதையும் சாத்தியமாக்கியுள்ளது. இது ஏதோ வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் இது நடந்துள்ளது. நமக்கு இது புதிதாகத் தெரிந்தால் கூட பெங்களூரில் மட்டும் இதுபோன்ற வினோதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது.
வாகனம்: அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. டிரைவர் இல்லாத கார் குட்டி கார் ஒன்று சமீபத்தில் பெங்களூர் சாலைகளைச் சுற்றி வந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பார்க்க ஹாலிவுட் படங்களில் வருவதைப் போல இருக்கும் இந்த வாகனத்தைப் பார்த்து பெங்களூர்வாசிகள் சற்று அதிர்ச்சியடைந்தார்கள் என்பதே உண்மை. இது தொடர்பான வீடியோவை அனிருத் ரவிசங்கர் என்பவர் தனது இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
On the streets of Bengaluru. @peakbengaluru pic.twitter.com/VtahXpa6Mh
— anirudh ravishankar (@anrdh89) July 22, 2023
ஆளே இல்லாத இந்த கார் பெங்களூரில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். "பெங்களூர் தெருக்களில்.." என்று அவர் இதைப் பதிவிட்டுள்ளார். இதை நிச்சயம் உங்களால் மட்டும் பார்க்க முடியாது. இது உண்மை தானா என்பதை உறுதி செய்யவே பல முறை பார்க்க வேண்டி இருக்கும். பெங்களூர் சாலைகளில் தான் இது நடந்து இருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம் தான். இந்த வீடியோவை இப்போது சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
டிரைவர் இல்லை: மேலும், இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பெங்களூரில் இதுபோன்ற ஒரு வாகனத்தைப் பார்த்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. பெங்களூரில் ஏகப்பட்ட டெக் நிறுவனங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவை இந்தளவுக்குத் தொழில்நுட்பத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் இது "இந்திய சைபர்ட்ரக்கா இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். சைபர்ட்ரக் என்பது எலான் மஸ்கின் டெஸ்லாவின் ஒரு மாடல் ஆகும். பெங்களூர் சாலையில் சைபர்ட்ரக்கா என்று இவர் ஷாக் ஆகியிருக்கிறார். இருப்பினும், இது சைபர்ட்ரக் இல்லை என நமக்குப் பார்த்தாலே தெரிகிறது.
இது என்ன புதிய வாகனம்: அதேபோல மற்றொரு நபர் இது zPodஆக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். zPod என்பதை வாகனங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் ஒரு தானியங்கி வாகனமாகும். zPod என்ற இந்த தானியங்கி வாகனத்தைப் பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற கம்பெனி தான் தயாரிக்கிறது.
முன்னதாக இதே மைனஸ் ஜீரோ என்ற நிறுவனம் தங்கள் வாகனம் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர். அதில் அவர்கள், , "zPod வாகனத்தில் பாரம்பரிய ஸ்டீயரிங் இருக்காது.. அதற்குப் பதிலாக, அதிநவீன கேமராக்கள் இருக்கும். வாகனத்தைச் சுற்றிலும் இந்த அதிநவீன கேமராக்கள் இருக்கும். சாலையில் டிராபிக் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ரியல் லைமில் ஆய்வு செய்து கண்டறிய இது நமக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளனர்.
எப்படி இயங்குகிறது: வாகனத்தைச் சுற்றி இருக்கும் கேமரா சென்சார்கள் தான் வாகனம் சுற்றி இயங்க காரணமாக இருக்கிறது. சாலையில் இருக்கும் தரவுகள் பெறப்பட்டு, அவை பிராசஸ் செய்யப்பட்டு ரியல் லைமில் வாகனத்தை எப்படி ஓட்டுவது குறித்த முடிவை இந்த வாகனம் எடுக்கிறது. இதற்காக அவர்கள் ஏஐ பிராசஸிங்கை பயன்படுத்துகிறார்கள்.
சாலையில் இருக்கும் தடைகளைத் தவிர்ப்பது, வேகக் கட்டுப்பாடு, எனப் பல வகை தரவுகளை பிரசாஸ் செய்கிறது. zPod வாகனத்தால் மனித தலையீடு இல்லாமல் தானாக வாகனத்தை இயக்க முடியும். இது இப்போது சோதனையில் இருக்கிறது. இது மட்டும் வெற்றியடைந்தால் இது இந்தியாவின் டெஸ்லாவாக உருவாக வாய்ப்புகள் மிக அதிகம்.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications