கர்நாடகாவின் ரயில்வே பட்ஜெட் ஒன்பது மடங்கு அதிகரிப்பு.. நரேந்திர மோடி ஒரே நாளில் செய்த பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: "கர்நாடகாவின் ரயில்வே பட்ஜெட் ஒன்பது மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று கர்நாடகாவுக்கு நான்கு அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள், இரண்டு இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் திட்டங்கள், கோவாவுடன் இணைக்கும் வந்தே பாரத் ரயில் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல்வேறு ரயில் திட்டங்களை தொடக்க வைத்தார். குறிப்பாக பெங்களூரு - மங்களூரு - கோவாவின் மட்கான் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் புதிய ரயில் பெங்களூரு, கடலோர கர்நாடகா மற்றும் கோவா இடையிலான ரயில் போக்குவரத்து இணைப்பை வலுவாக்கும். இந்த அதிவேக ரயிலின் வழக்கமான சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கும். இந்த வந்தே பாரத் ரயில் ஹாசன், சக்லேஷ்பூர், மங்களூரு, உடுப்பி, முருதேஷ்வர், கோகர்ணம், கார்வார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வழியாகச் சென்று கோவாவின் மட்கானைச் சென்றடையும் .

Nine-fold increase in Karnataka s railway budget a major move by Narendra Modi in a single day

தொடக்க நாளான நேற்று, SMVT பெங்களூரு, மங்களூரு சந்திப்பு மற்றும் மட்கான் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இரண்டு சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு - மட்கான் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வழித்தடம்

* ஸ்ரவணபெலகொளா

* ஹாசன்

* சக்லேஷ்பூர்

* சுப்பிரமணியா ரோடு

* கபகபுத்தூர்

* மங்களூரு சந்திப்பு

* உடுப்பி

* குந்தாப்புரா

* மூகாம்பிகா ரோடு பைந்தூர்

* முருதேஷ்வர்

* கோகர்ணா ரோடு

* கார்வார்

* மட்கான்

மற்றொரு தொடக்க சிறப்பு ரயிலான 06213, மங்களூரு சந்திப்பில் இருந்து புறப்பட்டு கபகபுத்தூர், சுப்பிரமணியா ரோடு, சக்லேஷ்பூர், ஹாசன், ஸ்ரவணபெலகொளா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இரண்டு சிறப்பு ரயில்களும் 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும். இதில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் மற்றும் சேர் கார் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

கர்நாடகாவில் நான்கு ரயில் நிலையங்கள் நவீனமயம்!

கர்நாடகாவில் சாமராஜநகர், சிக்கமகளூரு, சக்லேஷ்பூர், சுப்பிரமணியா ரோடு ஆகிய மறுசீரமைக்கப்பட்ட நான்கு ரயில் நிலையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாகல்கோட் - வந்தால் இடையே இரட்டை ரயில் பாதை

கர்நாடகாவின் 45 கிலோமீட்டர் நீளமுள்ள பாகல்கோட் - வந்தால் இரட்டை ரயில் பாதைத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 284 கிலோமீட்டர் நீளமுள்ள கடாக் - ஹொஸ்பேட் இரட்டை ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் புதிய பாதை மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்து மேம்படும். உள்ளூர் வர்த்தகம் வளர்ச்சி அடைவதுடன், குட்கி என்டிபிசி அனல் மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கும் உதவியாக இருக்கும்.

சக்லேஷ்பூர் - சுப்பிரமணியா ரோடு மலைப்பாதை மின்மயமாக்கல்

நாட்டின் மிகவும் சவாலான ரயில் பாதைகளில் ஒன்றான மங்களூரு பெங்களூருவை இணைக்கும் சக்லேஷ்பூர் - சுப்பிரமணியா ரோடு இடையிலான 55 கிலோமீட்டர் நீளமுள்ள மலைப்பாதை ரயில் வழித்தடத்தின் மின்மயமாக்கல் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தப் பணிகள் நிறைவடைந்ததன் மூலம் பெங்களூரு - மங்களூரு இடையிலான முழு ரயில் வழித்தடமும் தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்களை இனி இயக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+