உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் மஜத கூட்டணி சேரப்போவதில்லை.. தேவகவுடா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க போவதில்லை என தேவகவுடா கூறியுள்ளார்.
இந்த கருத்தையே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14 மாதங்களுக்கு முன் கர்நாடக பேரவை தேர்தரல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுக்கு பின் மஜத - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

இரு மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மஜத - காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களை மட்டுமே வெற்றி பெற்றன. இந்த வெற்றி என்பது கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியை இரு கட்சிகளும் ஜீரணிக்க முடியாமல் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி பல காரணங்களை வெளியிட்டனர். இந்நிலையில் கர்நாடகாவில் கூட்டணி அரசு ஆட்சியை இழந்துள்ள நிலையில், இரு கட்சிகளிடையே கூட்டணி தொடருமா அல்லது துண்டிக்கப்படுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
இதனிடையே அடுத்த மாதம் குறிப்பிட்ட சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, இனி நடைபெற உள்ள எந்த தேர்தலிலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா வேண்டாமா என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தியே முடிவெடுக்கப்படும்.
பெரும்பாலும் இனி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்ற முடிவையே எடுத்துள்ளோம். தனித்து போட்டியிடுவதையே மஜத தொண்டர்கள் விரும்புகின்றனர் என குறிப்பிட்டார். இதனையடுத்து இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் - மஜத கூட்டணி தொடராது என்பது உறுதியாகியுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications