பாஜக வேட்பாளரும் அண்ணன் மகனுமான பிரஜ்வலின் உல்லாச வீடியோ.. குமாரசாமி கொடுத்த ரியாக்ஷன்
பெங்களூர்: ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளரும் தனது அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தவறு செய்தால் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடம் இல்லை எனவும் விசாரணை முடிந்த பிறகு கருத்து கூறுவதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். அதாவது தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் ஆவார். ரேவண்ணாவின் உடன் பிறந்த தம்பிதான் முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

உல்லாச வீடியோ: இதையடுத்து மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி நடந்த 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
பழக்கமான பெண்களுடன்: பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் ஹாசன் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவியது. அதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வீடியோக்களும் இருந்தன. மேலும் உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
குமாரசாமி கருத்து: இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பூகமப்பத்தையே கிளப்பி விட்டுருக்கிறது. எனினும், இவை அனைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என்று பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பிரஜ்வல் ரேவண்னாவின் சித்தப்பாவுமான குமாரசாமி இவ்விவகாரம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். குமாரசாமி கூறியதாவது:- சிறப்பு விசாரணைக்குழுவிற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதை நான் பார்த்தேன். நானாக இருந்தாலும் சரி.. எனது தந்தை தேவகவுடாவாக இருந்தாலும் சரி.. பெண்களை மரியாதையாகவே நடத்தியுள்ளோம். யாராவது பாதிக்கப்பட்டு வந்திருந்தால்.. அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சி செய்து இருக்கிறோம்.
யாராக இருந்தாலும் சரி: ஹாசன் விவகாரத்தில் விசாரணையின் உண்மைகள் வெளிவரட்டும். யாராக இருந்தாலும் சரி... தவறு செய்து இருந்தால் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. எனவே, விசாரணையில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு நான் கருத்து சொல்கிறேன்” என்றார்.
இதற்கிடையே, ஆபாச வீடியோக்கள் வெளியான உடனே பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்குப் புறப்பட்டுப் போனதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “இதில் எனக்கு சம்பந்தம் இல்லை. சிறப்பு விசாரணைக்குகுழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நான் ஒன்றும் சொல்ல முடியாது: அதிகாரிகள் பணியை தொடங்கட்டும். அவர் வெளிநாடு சென்று இருந்தால்.. அவரை திரும்ப கொண்டு வருவது அவர்களின் பணி. நான் என்ன சொல்ல முடியும் இதில். அவர்கள் (சிறப்பு விசாரணைக்குழு) பிரஜ்வல் ரேவண்ணாவை அழைத்து வருவார்கள். கவலைப்பட வேண்டாம்.” என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications