என் பலம் எனக்கு தெரியும்.. ஆட்சி கவிழாது! கர்நாடக முதல்வர் குமாரசாமி கூல் பேட்டி
Recommended Video

பெங்களூரு:கர்நாடகாவில் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆபரேஷன் லோட்டஸ் என் பெயரில் அதிருப்தியில் உள்ள சில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று விட்டதால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் தங்களின் வாபஸ் முடிவைக் கடிதம் மூலம் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழல் குறித்து முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறுகையில், கர்நாடக ஆளும் அரசுக்கு 2 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் எந்தக் கவலையும் இல்லை. நான் எந்த பதற்றமும் இல்லாமல் இருக்கிறேன். என்னுடைய அரசின் பலம் எனக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்டி. தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சியைக் கவிழ்ப்பது கடவுளின் கைகளில் தான் இருக்கிறது.
எங்களின் 38 எம்எல்ஏக்களும், தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆசியுடன் உள்ளதால், ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி குழப்பத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகிறார்கள்.
ஆனால், எந்த நிலையற்றதன்மையும் அரசுக்கு இல்லை. கடவுளின் ஆசியுடன் நிலையான ஆட்சியைத் தரும் என்று கூறினார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications