‘3000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா’.. இன்று நள்ளிரவு இந்தியா ரிட்டர்ன்? ஏர்போர்ட்டில் கைது?
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச படங்களை எடுத்த கர்நாடகா எம்பி பிரஜ்வல் ரேவண்ணா இன்று நள்ளிரவு ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா அரசியலையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள். ஹாசன் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டவர்தான் சிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவுக்கு முன்னர் 20,000 பென் டிரைவ்கள் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் காட்டுத் தீயாக பரப்பிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது அடுத்தடுத்து பல பெண்கள் வரிசை கட்டிப் புகார் கொடுத்தனர். இதில் ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையின் பிடியில் இருந்து தப்பி ஜெர்மனுக்கு ஓடிவிட்டார் பிரஜ்வல் ரேவண்ணா. இதனால் லுக் அவுட் நோட்டீஸ் முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூர் கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாடுகளில் வைத்தே கைது செய்யும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மங்களூர் விமான நிலையத்துக்கு பிரஜ்வல் வரப் போவதாகவும் அங்கு அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரஜ்வல், மங்களூர் விமான நிலையத்துக்கு வரவில்லை.
தற்போது ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வரக் கூடிய லுஃப்தான்சா விமானத்தில் பிரஜ்வல் ரேவண்ணா என்ற பெயரில் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனால் பெங்களூர் விமான நிலையத்துக்கு இன்று நள்ளிரவு அல்லது அதிகாலையில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கினால் அங்கேயே போலீசார் கைது செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications