கர்நாடகா அடுத்த முதல்வர் யார்? டாப்பில் வந்த மாஜி சி.எம்! பசவராஜ் பொம்மை ‘அவுட்’.. ஆஹா.. கதை மாறுதே!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலையொட்டி, கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Edupress group நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாலும், பசவராஜ் பொம்மைக்கு முதல்வர் வேட்பாளராக மிகக் குறைந்த ஆதரவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் அடுத்த முதல்வருக்கான ரேஸில் எடியூரப்பாவே முன்னணியில் இருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுளது.
பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸின் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பாஜக ஆட்சியை தக்கவைக்கும்
கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் Edupress group இந்த தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் பாஜக 110-120 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70-80 இடங்களிலிம், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 10-15 இடங்களையும் மற்றவை 4-9 இடங்களையும் வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முதல்வர் யார்?
மேலும், கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு வாக்காளர்கள் அளித்துள்ள பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என வாக்காளர்கள் விரும்பினாலும், தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மிகக் குறைவான ஆதரவே கிடைத்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் 23 சதவீதம் பேர் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக ஆதரித்துள்ளனர்.

சித்தராமையா
முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டரை அடுத்த முதலமைச்சராக இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 22 சதவீதம் பேர் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா 20 சதவீத வாக்குகளைப் பெற்று, அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

டிகே சிவகுமார்
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் இந்தக் கருத்துக்கணிப்பில் 19 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு அடுத்த முதல்வருக்கான ரேஸில் 10 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்தக் கருத்துக்கணிப்பில் வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

பசவராஜ் பொம்மை
தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், பாஜகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் பாஜகவை பாதித்துள்ள சூழலிலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நீடிக்கவே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்றும், பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் இந்த தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications