Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஜஸ்ட் மிஸ்” பாஜக.. கர்நாடகாவை பிடிக்கும் காங்கிரஸ்! கிங் மேக்கர் குமாரசாமி -கருத்துக்கணிப்பு முடிவு

கர்நாடகா மாநிலத்தில் இன்னும் ஒன்றரை மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தனியார் நிறுவனம் வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. எனவே கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் ஒன்றரை மாதங்களில் நடைபெற இருக்கிறது.

பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்ட தொடங்கி இருக்கின்றன.

 பாஜகவுக்கு இருக்கும் பிரச்சனை

பாஜகவுக்கு இருக்கும் பிரச்சனை

எடியூரப்பாவின் விலகலை தொடர்ந்து கர்நாடகாவில் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், அதனால் வெடித்த மத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், லிங்காயத்து மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம் போன்றவற்றால் அக்கட்சிக்கு இந்த தேர்தல் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

எனவே மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும், கர்நாடக மாநில பாஜக அரசின் பணிகளை எடுத்துரைப்பதற்காகவும் கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து தொகுதி வாரியாக அக்கட்சி பொதுகூட்டங்களை நடத்தி தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

வெறுப்பு பேச்சுக்கள்

வெறுப்பு பேச்சுக்கள்

அந்த பொதுக்கூட்டங்களிலும் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய மத வெறுப்பு கருத்துக்களை பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே கர்நாடகாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள் மற்றும் லிங்காயத்து சமூகத்தினருக்கு பாஜக மீது அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தெம்புடன் காங்கிரஸ்

தெம்புடன் காங்கிரஸ்

மறுபக்கம் காங்கிரஸ் கட்சியோ கர்நாடகவை சேர்ந்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை முடிந்த தெம்புடன் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதேநேரம் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் இம்முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

கருத்துக்கணிப்பு முடிவுகள்

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணிகள் முடிவாவதற்கு முன் கர்நாடகாவில் மக்களின் மனநிலை என்னவாக உள்ளது என்பதை அறிய லோக் போல் என்ற தனியார் அமைப்பு கருத்துக்கணிப்பை நடத்தி ட்விட்டரில் அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

அதிக இடங்களில் காங்கிரஸ்

அதிக இடங்களில் காங்கிரஸ்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் இம்முறை காங்கிரஸ் கட்சி 107 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், பாஜக 92 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும், இதர 6 தொகுதிகளிலும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பிடிக்காது என்பதால் இம்முறையும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+