“பிராமண” ஹோட்டல்களால் வெடித்த சர்ச்சை.. சைவமும் ஹலால்தான்! “சாதி” பாகுபாடு என நெட்டிசன்கள் கொதிப்பு
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான உணவகங்கள், காபி ஷாப்களின் பெயர்கள் பிராமின் என்று வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான சாதி பாகுபாடு என்று ட்விட்டரில் ஒருவர் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப், ஹலால், மசூதி ஒலிப்பெருக்கி என்று மதம் சார்ந்த பிரச்சனைகள் கிளம்பி சற்றே ஓய்ந்து இருக்கின்றன.
இதில் குறிப்பாக ஹிஜாப், ஹலால் ஆகியவை மதத்தை வெளிப்படுத்துவதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன.

பிராமண உணவகங்கள்
இந்த சூழலில்தான் பெங்களூரு மாநகரத்தின் பல உணவகங்களுக்கு வெளிப்படையாக பிராமின் என்று பெயரிடப்பட்டு இருப்பதை ட்விட்டரில் பீலேராஜா என்ற நபர் விமர்சித்து இருக்கிறார். ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ ஆகிய உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளில் பிராமின் என்று தேடிய அவர், தனக்கு விடையாக கிடைத்த உணவகங்களின் பெயர்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து இருக்கிறார்.

டீக்கடை முதல் இட்லி கடை வரை
அதில் பிராமின்ஸ் காபி பார், பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின்ஸ் எக்ஸ்பிரஸ், அம்மாஸ் பிராமின் கபே, பிராமின் டிபன் & கபே, பிராமின் டிபன், பிராமின்ஸ் கபே என 10க்கும் மேற்பட்ட உணவகங்கள், காபி பார்களின் பெயர்கள் வருகின்றன. ஸ்விக்கியில் இதுபோல் அவர் தேடியபோது வழக்கமான புளியோதரை, பானிபூரி போன்ற உணவுகளின் முன்பாக பிராமின் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை ஸ்க்ரீன் ஷாட்டாக அவர் பதிவிட்டு உள்ளார்.

பிராமணர்கள் யார்?
வேதங்களின் கூற்றுபடி பிராமணர்கள் என்பவர்கள் பிரம்மணின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்றும், வர்ணாசிரமத்தில் உயர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் புனிதமானவர்கள் என்றும் வேதங்களை படிக்க தகுதிபெற்றவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த வர்ணாசிரம தர்மம் சாதி அடிப்படையில் மக்களிடம் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாக விமர்சனம் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில்தான் பிராமின் என்று பெயர் வைத்துள்ள உணவகங்களின் மீது நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.

பிராமண உணவு கலாச்சாரம்
இந்த பதிவை வெளியிட்ட பீலேராஜா கூறுகையில், "பிராமணர்களுக்கு என்று எந்தவிதமான தனி உணவு பழக்கமும் இல்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் பரவியுள்ள பிராமணர்களிடையிலும் வேறுபட்ட உணவு கலாச்சாரம் உள்ளது. மீன்களையும் இறைச்சியையும் கூட உண்பவர்கள் இருக்கிறார்கள். உங்கள் உணவகத்தில் பிராமின் என்று நீங்கள் குறிப்பிடுவது சாதியை வெளிப்படுத்துவதே அன்றி வேறில்லை." என்று கூறி இருக்கிறார்.

வரவேற்பும் விமர்சனமும்
ட்விட்டரில் இப்பதிவை வாசித்த பலர் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்திட்டு வருகின்றனர். உணவகங்கள், உணவுகளில் சாதி பெயர்களை குறிப்பிட அனுமதிக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்ட உணவகங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் பலர் கருத்திட்டு வருகின்றனர். அதேபோல், இதில் எந்த தவறும் இல்லை என்றும், பிராமணர்கள் மட்டுமின்றி மற்ற சாதிகளை சேர்ந்தவர்களும் இதேபோல் உணவகங்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். ஹலால் உணவுகள் வழங்கப்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சைவ உணவகங்களும் ஹலால்
இதற்கு பதிலளித்துள்ள பீலேராஜா, "இந்த பதிவில் ஹலால் குறித்து பேசும் பலரும், பிராமணர்களால் நடத்தப்படும் சுத்த சைவ உணவகங்களும் முழு ஹலால் என்பதை உணருங்கள். இந்தியாவில் நிலவும் பிற்போக்குத் தனத்தை புரிந்துகொள்ள எனது பதிவுக்கு வந்து இருக்கும் பதில்களை படியுங்கள்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாட்டிலும் இதேபோல் ஐயங்கார் பேக்கரி, ஐயர் காபி, நாயுடு ஸ்வீட்ஸ், தேவர் மெஸ், நாடார் மெஸ், கவுண்டர் மெஸ் என சாதிகளின் பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications