Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

95% பேர் கோடீஸ்வரர்கள்.. குபேரர்களாக வாழும் கர்நாடகா எம்எல்ஏக்கள்.. மிரளவைக்கும் சொத்துகள்! விபரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அங்கு எம்எல்ஏக்களாக உள்ளவர்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் குபேரர்களாக வலம் வரும் நிலையில் கர்நாடகாவில் பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியலில் முதல் 3 இடத்தை காங்கிரஸ் கட்சியினரே பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் உள்ள எம்எல்ஏக்களில் சொத்து விபரங்கள், அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு பல்வேறு முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

குற்றவியல் வழக்குகள்

குற்றவியல் வழக்குகள்

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 219 எம்எல்ஏக்களின் கல்வி தகுதி, நிதி ஆதாரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 112 பாஜக எம்எல்ஏக்களில் 49 பேர் மீதும், 67 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 16 பேர் மீதும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் 30 எம்எல்ஏக்களில் 9 பேர் மீதும் 4 சுயேச்சை எம்எல்ஏக்களில் 2 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன‌. இதில் 35 பாஜக எம்எல்ஏக்கள், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 8 ஜனதா தள‌ம்(எஸ்) எம்எல்ஏக்கள் மீது மிக கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அதன்படி பார்த்தால் பாஜக எம்எல்ஏக்கள் மீதுதான் அதிக குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

மேலும் மொத்தமுள்ள‌ எம்எல்ஏக்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் குபேரர்களாக உள்ளனர். அதாவது அவர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதன்படி பார்த்தால் கர்நாடகா சட்டசபையில் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.29.85 கோடியாக உள்ளது.

 பாஜகவில் 112 பேர் கோடீஸ்வரர்கள்

பாஜகவில் 112 பேர் கோடீஸ்வரர்கள்

பாஜகவில் 118 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 112 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதன்படி பார்த்தால் பாஜக எம்எல்ஏக்களில் 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களா உள்ளனர். பாஜக எம்எல்ஏக்களை பொறுத்தமட்டில் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.19.6 கோடியாக உள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளன நிலையில் 28 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதன்படி அந்த கட்சி எம்எல்ஏக்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.34 கோடியாகஉள்ளது. 4 சுயேச்சை எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.40.92 கோடியாக இருக்கிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விபரம்

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விபரம்

காங்கிரஸ் கட்சிக்கு 67 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 65 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 97 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.48.58 கோடியாக உள்ளது.

டிகே சிவக்குமார் முதலிடம்

டிகே சிவக்குமார் முதலிடம்

தற்போதைய எம்எல்ஏக்களில் அதிக சொத்து வைத்திருக்கும் நபராக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள டிகே சிவக்குமார் உள்ளார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருக்கிறது. அவருக்கு அடுத்த நிலையில் பெங்களூர் ஹெப்பால் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான பைரதி சுரேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.416 கோடியாக உள்ளது. 3வது இடத்தில் பெங்களூர் விஜயநகர் தொகுதி எம்எல்ஏவான கிருஷ்ணப்பா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.236 கோடியாக உள்ளது.

பட்டப்படிப்பை முடித்த எம்எல்ஏக்கள்

பட்டப்படிப்பை முடித்த எம்எல்ஏக்கள்

மேலும் கர்நாடக எம்எல்ஏக்களில் 73 பேர் அதாவது 33 சதவீதம் பேர் 12ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளனர். 140 எம்எல்ஏக்கள் பட்டப்படிப்பை படித்துள்ளனர். 2 பேர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர் என ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+