Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் தனித்து தான் போட்டி.. ஓவைசி கொடுத்த அப்டேட்.. பாஜகவிற்கு சாதகமாக திரும்புகிறதா?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். ஓவைசியின் இந்த அறிவிப்பால் முஸ்லீம்கள் வாக்குகள் சிதற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அதோடு, இதனால்,பாஜகவிற்கே கூடுதல் சாதகமாக அமையும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. ஏனெனில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு செல்ல வேண்டிய இஸ்லாமியர்களின் வாக்கு சதவிகிதம் ஓவைசி போட்டியிட்டால் குறையக் கூடும் என்று பேசப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார்.

கர்நாடகத்தில் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதம் இறுதியில் முடிவுக்கு வருகிறது. இதனால், அதற்குள் அங்கு சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் தேர்தல் களம் தற்போதே படிப்படியாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதிதான் அறிவிக்கவில்லையே தவிர தேர்தல் பணிகளை ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி கர்நாடகாவில் அடிக்கடி பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள தொடங்கி வைத்து வருகிறார்.

இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க

இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க

அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் அடிக்கடி கர்நாடகாவிற்கு விசிட் செய்து வருகின்றனர். கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதில் திவீரமாக உள்ளது. பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை தற்போதே வெளியிட்டு வருகிறது.

ஓவைசியின் கட்சியும் போட்டி

ஓவைசியின் கட்சியும் போட்டி

காங்கிரஸ் தவிர மற்றொரு முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கர்நாடகாவில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக தேர்தல் களத்தில் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசியின் கட்சியும் போட்டியிட இருக்கிறது. இந்த தகவலை ஓவைசி பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருந்தார்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட இருக்கிறோம்" என்றார். அதேபோல், 3 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் ஓவைசி வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, ஹூப்ளி தார்வாட் கிழக்கு தொகுதியில் துர்கப்பா பிஜ்வாட், பசவண்ணா பாகேவாடி தொகுதியில் அல்லாபக் ஷ் பிஜாப்பூர் பெலகாவி வடக்கு தொகுதியில் லதீப் கான் பதான், ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

முஸ்லீம்கள் வாக்குகள் சிதற வாய்ப்பு

முஸ்லீம்கள் வாக்குகள் சிதற வாய்ப்பு

இதில் ஒருவேட்பாளர் இந்து மதத்தை சேர்ந்தவர். இது தொடர்பாக ஓவைசி கூறும் போது, எங்கள் கட்சி முஸ்லிம் கட்சி என்று கூறினாலும் நாங்கள் இந்துக்களுக்கு உரிய பிரநிதித்துவம் அளிக்கிறோம். ஆனால், பாஜக அவ்வாறு நடந்து கொள்வது இல்லை" என்றார். ஓவைசி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருப்பதால் அங்கு முஸ்லீம்கள் வாக்குகள் சிதற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாஜகவின் பி டீம்?

பாஜகவின் பி டீம்?

பாஜகவிற்கு எதிரான இந்த வாக்குகள் சிதறும் பட்சத்தில் பாஜகவிற்கே இது சாதகமாக முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. ஏற்கனவே ஓவைசி முஸ்லிம் வாக்குகளை பிரித்து பாஜகவின் பி டீம் போல செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், கர்நாடகாவிலும் ஓவைசி தனித்து போட்டியிடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+