கடன் தந்தவர் மனைவிக்கே காதல் தொல்லை! பான் சப்ளையர் கொலை! இறந்தவர் மனைவி கொலையாளிகளுடன் எஸ்கேப்!
பெங்களூர்: பெங்களூரில் காதல் மோகம், கொடுத்த கடனை திரும்ப தராதது உள்ளிட்ட காரணத்தால் பான்மசாலா சப்ளையரை கழுத்து இறுக்கி கொன்ற தம்பதியுடன், கொலையான நபரின் மனைவி எஸ்கேப் ஆனது தெரியவந்துள்ளது.
பெங்களூர் பெல்லத்தூர் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஜூலை 5ல் அழுகிய நிலையில் ஒருவரின் உடல் சாக்குப்பையில் கிடந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பான் மசாலா சப்ளையர் கொலை
மேலும் சாக்குப்பையில் உடல் இருந்ததால் கொலை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இருப்பினும் அவர் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது இறந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓம்நாத் சிங் (வயது 48) என்பதும், அவர் பெங்களூர் பெல்லத்தூரில் வசித்து கொண்டு பான் மசாலா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்ததும் தெரியவந்தது.

வீட்டில் இருந்து மாயம்
இதையடுத்து அவர் வசித்து வந்த இடத்துக்கு சென்று போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அவரது மனைவி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி என மூவரும் வெளியூர் சென்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் தான் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மங்களூரில் சிக்கிய மூவர்
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நியைில் மங்களூரில் பதுங்கி இருந்த ஓம்நாத் சிங்கின் மனைவி குஞ்சாதேவி(35), அவருடன் இருந்த ஆயத்தஆடை தொழிலாளி விஷால் பிரஜாபதி 24, அவரது மனைவி ரூபி 23, ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

3 நாள் சித்ரவதை-கொலை
அதாவது விஷால் பிரஜாபதி, ஓம்நாத் சிங்கிற்கு கடன் கொடுத்துள்ளார். இந்த கடனை திரும்ப கேட்டபோது அவர் கொடுக்கவில்லை. மேலும் ஓம்நாத் சிங், ரூபி மீது ஆசை கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த விஷால் பிரஜாபதி, ஓம்நாத் சிங்கை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் ஓம்நாத் சிங்கை தனது வீட்டில் கட்டிவைத்து 3 நாட்கள் பெல்ட்டால் தாக்கி சித்ரவதை செய்தார். அதன்பிறகு விஷால் பிரஜாபதியும், அவரது மனைவி ரூபியும் இணைந்து கழுத்தை இறுக்கி ஓம்நாத் சிங்கை கொலை செய்தனர்.

கொலையை மறைக்க திட்டம்
அதன்பிறகு விஷால் பிரஜாபதி-ரூபி தம்பதி கொலையை மறைக்க திட்டமிட்டவர்கள் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி 150 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் வீசியது தெரியவந்தது. மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்திருந்தாலும் கூட ஓம்நாத் சிங்கின் மனைவி குஞ்சாதேவி அதுபற்றி போலீசில் புகார் செய்யவில்லை. மாறாக அவர் விஷால் பிரஜாபதி-ரூபி தம்பதியுடன் சேர்ந்து மங்களூர் சென்றுள்ளார். இதனால் குஞ்சா தேவியையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அவரது பாத்திரம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அருகருகே வசித்த குடும்பம்
முன்னதாக கைதான தம்பதி மற்றும் கொலையான ஓம்நாத் சிங்-குஞ்சா தேவி தம்பதி ஆகியோர் இதற்கு முன்பு குஜராத்தில் வேலை செய்தனர். அப்போதும் அவர்கள் அருகருகே வீடுகளில் வசித்து வந்தனர். அதன்பிறகு பெங்களூர் வந்தும் இருகுடும்பத்தினர் அருகருகே வீடுகளில் வசித்து வந்த நிலையில் ஓம்நாத் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications