"சொந்த மக்களை கொல்லும் நீங்க.." சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்த இந்தியா
ஜெனீவா: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியாவைச் சீண்டப் பார்த்த பாகிஸ்தானுக்கு, சர்வதேச அரங்கில் வைத்து சாட்டையடி பதிலை இந்தியா கொடுத்துள்ளது.. சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போடும், இனப்படுகொலை செய்யும் நாடு எங்களுக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை என்று ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆயுத மோதல்களில் சாமானிய மக்களின் பாதுகாப்பு குறித்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிகழ்வுகளில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தாண்டும்கூட அதே போல காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கையில் எடுத்த நிலையில், வழக்கம் போல இந்தியா தரமான பதிலடி கொடுத்தது.

இந்தியா
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஐநாவின் இந்திய நிரந்தரப் பிரதிநிதி ஹரீஷ் பர்வதனேனி பாகிஸ்தானின் முகத்திரையை அடியோடு கிழித்துள்ளார். பாகிஸ்தான் கடந்த காலங்களில் செய்த கொடூரங்களை பட்டியலிட்டு சாடினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் புனித ரமலான் மாதத்தின் போது, அமைதியும் தியானமும் நிலவ வேண்டிய வேளையில், ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஒமித் போதைப்பொருள் ஒழிப்புச் சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலை குறிப்பிட்டார்..
கொடூர தாக்குதல்
இந்த மனிதாபிமானமற்ற வான்வழித் தாக்குதலில் 269 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.. 122 பேர் படுகாயமடைந்தனர். மாலைத் தொழுகை முடிந்து நோயாளிகள் அங்கிருந்த மசூதியிலிருந்து வெளியேறிய அந்த நேரத்தில், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரு மருத்துவமனையை இலக்காக கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்தியா மிக கடுமையான கருத்தை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் மீது தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனால் 94,000க்கும் மேற்பட்ட ஆப்கானிய மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானின் தற்போதைய அராஜகங்களை மட்டுமல்லாமல், 1971ம் ஆண்டு விடுதலைப் போரின்போது அந்நாட்டு ராணுவம் நடத்திய வரலாற்றுப் படுகொலைகளையும் இந்தியா உலக அரங்கிற்கு நினைவூட்டியது. பாகிஸ்தான் ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சர்ச்லைட்' (Operation Searchlight) நடவடிக்கையின் போது, சொந்த நாட்டு குடிமக்களாக இருந்த சொந்த நாட்டு பெண்களையே பலாத்காரம் செய்ததாகவும் இனப்படுகொலை செய்ததாகவும் ஹரீஷ் பர்வதனேனி சுட்டிக்காட்டினார்.
சொந்த நாட்டு மக்கள் மீதே
அவர் மேலும், "சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளைப் போடும், இனப்படுகொலைகளை நடத்தும் ஒரு நாட்டிடமிருந்து இதுபோன்ற அராஜகங்கள் வெளிவருவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இருட்டில் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கிவிட்டு, சர்வதேச சட்டங்களைப் பற்றிப் பேசுவது பாகிஸ்தானின் அப்பட்டமான போலித்தனம். உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க, எல்லை தாண்டிய வன்முறையைத் தூண்டுவதையே தங்களின் கொள்கையாகப் பாகிஸ்தான் வைத்துள்ளது!" என சாடினார்.
கடும் தாக்கு
பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள தோல்விகளை மறைக்கவே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான ஜம்மு காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச மேடையில் எழுப்புவதற்குத் தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்தது. மேலும், சொந்த மக்களை தாக்கி அராஜகம் செய்யும் நாடு, தங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்றும் இந்திய பிரதிநிதி சாடினார்.
அதேநேரம் பாகிஸ்தான் இதுபோல சர்வதேச மேடைகளில் அசிங்கப்படுவது இது முதல்முறை இல்லை.. சர்வதேச அரங்கில் தன்னை உத்தமன் போல பாகிஸ்தான் காட்டி கொள்ள முயல்வதும், அதை இந்தியா தோலுரிப்பதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி












Click it and Unblock the Notifications