எச்சிஎல் ஐடி வேலைவாய்ப்பு.. சென்னையில் நாளை மறுநாள் இண்டர்வியூ.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை மறுநாள் (ஜூலை 2) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Senior Customer Support ரோல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணி என்பது சேல்ஸ் சப்போர்ட் மற்றும் என்டர்பிரைஸ் டீமில் இருக்கும்.

hcl-walk-in-for-senior-customer-support-at-ambattur-on-july-2

இந்த பணிக்கு பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு கொண்ட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்எஸ் எக்ஸல், பவர் பாயிண்ட் தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மல்டிடாஸ்க்கிங் பணி தெரிந்திருக்க வேண்டும். எம்எஸ் அக்சஸ் மற்றும் SQL Proficiency தெரிந்திருந்தால் அது கூடுதல் பலமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வாகும் நபர்களுக்கு பணி என்பது அக்கவுண்ட் மேனேஜருக்கான அசிஸ்டென்ட்டாக செயல்பட வேண்டி இருக்கும். சேல்ஸ் ரிப்போர்ட், ஆரக்கள், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்ட சிஆர்எம் டூல்ஸ்களில் பணியாற்ற வேண்டியிருக்கும். டேட்டாஅனலிசிஸ் அடிப்படையில் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டி இருக்கும். அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட பிரிவில் பிற பணிகள் இருக்கும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அமெரிக்க ஷிப்ட்டில் பணி இருக்கும். இதனால் நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.

இதற்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (ஜூலை 2) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ HCL Tech, No.8, MTH Road, AMB 6, Ambattur Industrial Estate, Ambattur, Chennai 600 058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்பவர்கள் அதற்கு தேவையான ஆவணங்கள், 2 ரெஸ்யூம், அடையாள அட்டை உள்ளிட்டவை எடுத்து செல்ல வேண்டும்.. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+