சென்னை - பெங்களூர் - புனேவில் ஐடி வேலை ரெடி.. ஜூலை 4ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட 3 நகரங்களில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ இந்த 3 நகரங்களிலும் தனித் தனியாக ஜூலை 4ம் தேதி நடைபெற உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டெக்னிக்கல் ரெக்ரூட்மென்ட்ஸ்க்காக சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

hcl-walk-in-drive-for-java-developer-on-july-4th-in-chennai-bangalore-and-pune

அதன்படி, பிரைமரி ஸ்கில்ஸாக ஜாவா இருக்க வேண்டும். பிரேம்வொர்க்ஸில் ஸ்பிரிங்புட், மைக்ரோசர்வீச், மெசேஜ்ஜிங்கில் Kafka, RabbitMQ/ MQ தெரிந்திருக்க வேண்டும்.

Cloud-யில் AWS/Azure/any Cloud Platform தெரிந்திருக்க வேண்டும். வெப் சர்வீசஸில் REST APIs தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயமாக 5+ ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்க தேர்வாகும் நபர்கள் சென்னை, புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட நகரங்களில் ஜூலை 4ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

சென்னை என்றால் SDB1, Sholinganallur Campus முகவரியில் நடைபெற உள்ளது. பெங்களூர் என்றால் SEZ, No.129, Jigani Bommasandra Link Road, Jigani Industrial Area, புனே என்றால் Plot 6 & 8, Rajiv Gandhi infotech park, MIDC Phase 1, Hinjewadi முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

இண்டர்வியூவிற்கு லேப்டாப் கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை லேப்டாப் இல்லாவிட்டால் அலுவலகம் சார்பில் வழங்கப்படும். இண்டர்வியூவில் Hacker Earth (2 hour Technical Evaluation) இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம்.

இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இ-மெயிலில் Call Letter அனுப்பி வைக்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+