ட்விஸ்ட்..இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லை! வரலாற்றிலேயே ஃபர்ஸ்ட் டைம்! ஒன்று சேரும் திமுக -அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழக அரசியல் சூழலை பரபரப்பாக்கி வருகிறது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் தாம் நேரடியாக போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனுடன், அவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சி நடக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால் அது தமிழக அரசியலின் முதன்முறை நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல், தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கும் முதல் பெரிய அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது.

Seeman

இந்த சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. அம்பையில் சீமான் போட்டியிடுவதாக அறிவித்ததை அடுத்து, அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீமான்

குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் சீமானை ஆதரிக்கும் சூழல் உருவாகுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை வென்றாலும், தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. அதன் பின்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. குறிப்பாக, அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளிக்க முன்வந்ததாக வெளியான தகவல்கள் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இடைத்தேர்தல்

இந்த நிலையில், இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதினால், சீமானுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக நாதக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியை எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த தொகுதி அதிமுகவின் பலமான பகுதியாகவே கருதப்படுகிறது.

திமுக

2016 தேர்தலில், அதிமுகவின், முருகையா பாண்டியன், 2021 தேர்தலில் அதிமுகவின் இசக்கி சுப்பையா, 2026 தேர்தலிலும் இசக்கி சுப்பையாவே வெற்றி பெற்றுள்ளனர். 3 தேர்தல்களிலும் திமுக அல்லது அதன் கூட்டணி வேட்பாளர்களே 2வது இடத்தை பெற்றுள்ளனர். இந்த வாக்கு விவரங்களைப் பார்க்கும்போது, அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இந்த தொகுதியில் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ளன என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று வருகிறது.

அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்தவரை பல்வேறு சாத்தியக்கூறுகள் பேசப்படுகின்றன. ஆளும் கட்சி தனியாக களமிறங்குவது உறுதியாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுமா அல்லது ஒரே வேட்பாளரை ஆதரிப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய அரசியல் கூட்டணிக்கு வழிவகுக்கும் என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

திமுக - அதிமுக

குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய நீண்டகால அரசியல் போட்டியாளர்கள் ஒரே வேட்பாளரை ஆதரிப்பது நடந்தால், அது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமையும். இருப்பினும், இதுவரை திமுக அல்லது அதிமுக தரப்பில் சீமானுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது இது அரசியல் வட்டாரங்களில் விவாதமாக மட்டுமே உள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் அறிவிப்புகள், கூட்டணி முடிவுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் வெளியாகும் நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி தமிழகத்தின் மிகவும் பரபரப்பான தேர்தல் களமாக மாறும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+