பெங்களூரில் திருவள்ளுவர் பெயரில் நூலகம், பூங்கா.. சிவாஜிநகர் ம.ஜ.த வேட்பாளர் அதிரடி வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் திருவள்ளுவா் பெயரில் பூங்கா மற்றும், நூலகம் அமைக்கப்படும் என்று சிவாஜிநகா் தொகுதி மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளா் தன்வீா் அகமது வாக்குறுதி அளித்துள்ளார்.

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெங்களூரில், உள்ள சிவாஜிநகர், கே.ஆர்.புரா, யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட் ஆகிய 4 தொகுதிகளும் அடங்கும்.

Park and library will be set up in the name of Thiruvalluvar in Bengaluru: Tanveer Ahmed

இதில் சிவாஜிநகர் அதிக அளவுக்கு தமிழர்கள் வசிக்க கூடிய தொகுதிகளில் ஒன்று. எனவே, இங்கு போட்டியிடும், பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர்கள், தமிழர்களின் வாக்குகளை பெற தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

சிவாஜிநகா் தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிடுகிறார் தன்வீா் அகமது. இவர் பெங்களூர் அல்சூரில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு (கருணாநிதி-எடியூரப்பாவால் திறந்து வைக்கப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Park and library will be set up in the name of Thiruvalluvar in Bengaluru: Tanveer Ahmed

இதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழா்கள் அதிகம் வாழும் தொகுதியான சிவாஜிநகா் தொகுதியில் மஜத வேட்பாளராக நான் போட்டியிடுறேன். இத்தேர்தலில் தமிழா்களின் ஆதரவை எதிா்பாா்த்து காத்து நிற்கிறேன்.

தமிழா்களின் அடையாளமாக திகழும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்ததை பெருமையாக கருதுகிறேன். திருவள்ளுவா், ஜாதி, மத குறியீடுகளுக்கு அப்பாற்பட்டவா். திருவள்ளுவா் எழுதிய திருக்குறள் உலக பொதுமறை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதை கண்டிக்கிறேன்.

சிவாஜிநகா் சட்டசபை தொகுதியில் நான் வெற்றி பெற்றால் திருவள்ளுவா் பெயரில் பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்படும். இதன் மூலம் திருவள்ளுவரை மேலும் கவுரவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+