உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார்.
பெங்களூர்: உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி காலமானார். மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி இன்று அதிகாலை காலமானார்.
இந்தியாவில் உள்ள முக்கியமான இந்து மத தலைவர்களில் விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி முக்கியமானவர். உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஆவார். 88 வயதாகும் விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி, 1931ஆம் ஆண்டு ராமகுஞ்சா என்ற ஊரில் பிறந்தார்.

தனது எட்டாவது வயதில் அவர் சன்னியாசம் பூண்டார். அதன்பின் பல்வேறு மடங்களில் துறவு பூண்டவர் , உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி ஆனார். இந்தியாவில் மிக முக்கியமான இந்து மத மடமாக, பெஜாவர் மடம் திகழ்கிறது.
அரசியல் ரீதியாக, அத்வானி, உமா பாரதி, வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலருக்கும், விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி நெருக்கமானவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி கடந்த 20ஆம் தேதி அதிகாலை முதல், மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். நேற்று இவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து அவதிப்பட்டார். இதனால் இவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு முழுக்க உடுப்பி தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று இவரை காண இந்து மத தலைவர்கள், சீடர்கள் பலர் மருத்துவமனையில் கூடினார்கள். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி இயற்கை எய்தினார்.
இவரை நேற்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக கட்சியை சேர்ந்த மூத்த எம்பி உமா பாரதி நேரில் சென்று சந்தித்தார். எம்பி உமா பாரதி, விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமியின் சீடர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை இவரின் இறுதிச்சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை சேர்ந்த முக்கியமான தலைவர்கள், இந்து மத தலைவர்கள் பலர் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications