Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ்...! ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை.. போட்டி போட்டுக்கொண்டு வைக்கும் இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை

    பெங்களூரு: வான்மகன் அபிநந்தனை போன்று... மீசை வைத்துக் கொள்ளும் பாணியானது தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

    பொதுவாக... நமக்கு பிடித்த, நம்மை கவர்ந்தவர்களின் அடையாளங்கள், செயல்கள், அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்றுவோம். அதற்கு எல்லையே கிடையாது.

    பிடித்த நபர்கள் யாராக இருந்தாலும் சரி... சகட்டு மேனிக்கு அவராகவே மாறிக் கொள்வோம்.. மகிழ்ந்தபடியே அனைவருக்கும் பரிமாறிக் கொள்வோம். அப்படி ஒரு ஸ்டைல் அல்லது டிரெண்டிங் இப்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்த பெயர் தான் அபிநந்தன்... அதிலும் அவரது மீசை ஏக பிரபலம்.

     முதுகில் காயம்

    முதுகில் காயம்

    இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தில் சென்று, பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பின் அந்நாட்டு ராணுவத்திடம் விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கையில், முதுகில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

     மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை

    சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அபிநந்தனை விடுவிக்க இம்ரான் கான் ஒப்புக் கொண்டார். 2 நாட்களுக்கு பின், சில மணி நேரத் தாமதத்தை அடுத்து, அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

     டிரெண்டாகும் மீசை

    டிரெண்டாகும் மீசை

    பாகிஸ்தானில் இருந்து வீரநடை போட்டு வந்த அபிநந்தனுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் அபிநந்தனின் மீசை ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

    மீசை கார்ட்டூன்

    அபிநந்தன் என்றால் முதலில் முதல் குறியீடாக அவருடைய மீசை இருப்பதால், ஹேஷ்டேக், ட்ரெண்ட் என எல்லாவற்றிலும் அபிநந்தன் மீசையை போன்ற கார்ட்டூன் இடம் பெற்றிருக்கிறது.

    அபிநந்தன் போன்ற மீசை

    தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அபிநந்தன் மீசை என்று சொல்லி இளைஞர்கள் விரும்பி வைத்துக் கொள்கிறார்கள். நான் அவரது ரசிகனாகி விட்டேன் என்று விமானி அபிநந்தன் போன்று மீசை வைத்துள்ள பெங்களூருவாசி ஒருவர் கூறியிருக்கிறார்.

    இளைஞர்கள் ஆர்வம்

    பல நகரங்களில் இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கி விட்டனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசித்து வருபவர் முகமது சந்த். இவர் விமானி அபிநந்தனை போன்று மீசை வைத்துக் கொண்டுள்ளார்.

     அபிநந்தன் ரசிகன்

    அபிநந்தன் ரசிகன்

    இதுபற்றி அவர் கூறியதாவது:நான் அவரது ரசிகன். அவரை பின் தொடருகிறோம். அவரது ஸ்டைலை நான் விரும்புகிறேன். அவரே உண்மையான ஹீரோ. மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+