பெங்களூர் அருகே திருடனை பிடித்துக் கொடுத்த நாய்
பெங்களூர்: பெங்களூர் அருகே வீட்டில் வளர்த்து வரும் நாய் திருடனை பிடிக்க உதவி செய்துள்ளது.
பெங்களூருவில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ராமநகரா. அங்குள்ள விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் வீட்டு நாய் ராமு குரைத்துக் கொண்டே இருக்க கண் விழித்த ஸ்ரீனிவாஸ் வெளியே வந்து பார்த்துள்ளார்.

நாய் கழிப்பறையின் வாசலில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஸ்ரீனிவாஸ் கழிப்பறை கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது அந்த பகுதியில் குப்பை பொறுக்கும் நபர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
அந்த நபர் திருட வந்திருக்க வேண்டும். அவரை பார்த்த நாய் ராமு அவரை துரத்தவே கழிப்பறைக்குள் சென்று ஒளிந்திருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸ் புகார் அளிக்காததால் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டோம் என்றனர்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications