ஹிஜாப் வழக்கு மேல்முறையீடு! ஹோலிக்கு பின் விசாரிப்போம்.. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பெங்களூர்: ஹிஜாப்புக்கு தடை விதித்தது செல்லும் எனக்கூறி மாணவிகளின் மனுக்களை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் ஹோலி விடுமுறைக்கு பின் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
Recommended Video
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு குடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிஷால் அணிந்து போராட்டங்கள் நடந்தன.
கர்நாடகத்தில் சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.

மாணவிகள் மனுத்தாக்கல்
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்த அமர்வு 11 நாள் விசாரித்தது. பிப்ரவரி 25ல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மேல்முறையீடு
மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே இன்று கூறினார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஹோலி விடுப்புக்கு பின்
இதுதொடர்பாக வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகையில், ‛‛ விரைவில் தேர்வு வர உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' என்றார். இதற்கு தலைமை நீதிபதி, ‛‛எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி விடுப்புக்கு பிறகு பார்ப்போம் '' என்றார். இதன்மூலம் ஹோலி விடுப்புக்கு பிறகு இந்த மனுக்கள் பட்டியலிட்டு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications