கர்நாடகாவில் புற்றுநோய்க்கு போலி மருந்து விற்பனை.. முக்கிய நபர் அதிரடி கைது.. பின்னணியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் புற்றுநோயை குணமாக்கும் மருந்து, ஐசியூவில் பயன்படுத்தும் மருந்து உள்பட பிற உயிர் காக்கும் மருந்துகள் என்று கூறி காலாவதியான மற்றும் போலி மருந்துகளை தனி குப்பிகளில் அடைத்து 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்து பலபேரின் உயிருடன் விளையாடிய வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பிடதி டோல்கேட்டில் உள்ள பண்ணை வீட்டில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு - மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும்.

Fake cancer drugs

இவர்கள் தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து காலாவதியான மருந்துகளை கொண்டு வந்து தனி குப்பிகளில் அடைத்து புதிய லேபிள் ஒட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் புற்றுநோய் மருந்து, ஐசியூவில் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்பட பிற நோய்களுக்கான மருந்துகளை 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் என்று 90 இடங்களுக்கு இந்த மருந்துகளை அனுப்பி பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஏனென்றால் பலரும் அந்த மருந்துகளை வாங்கி சென்றிருந்தனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட மருந்துகளின் விற்பனை மற்றும் பயன்பாடு கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு தறயை சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு விசாரணை குழுவினர் சுகாதாரத்துறையுடன் சேர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தான் வீரேஷ் குமார் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தான் மினர்வா சர்க்கிளில் கிருபா ஹெல்த்கேர் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலி மருந்துகளை மருத்துவமனை மற்றும் கிளினிக்கிற்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

பிடதி பண்ணை வீட்டில் இருந்து வரும் காலாவதியான மற்றும் போலி மருந்துகளை வீரேஷ் குமார் ஜெயின் சேமித்து வைத்து பல இடங்களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் இப்போது சிக்கி உள்ளார். இவர் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்றும், கர்நாடகாவை தாண்டி பிற மாநிலங்களுக்கும் மரந்துகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+