எஸ்டேட் உரிமையாளர் மகனாக இருந்து... இந்தியாவின் காபி கிங்கான சித்தார்த்தா.. கடந்து வந்த பாதை
Recommended Video
பெங்களூர்: காபி எஸ்டேட் உரிமையாளரின் மகனாக இருந்த விஜி சித்தார்த்தா இன்று இந்தியாவின் காபி கிங்காக கடந்து வந்த பாதை எத்தகையது.
எஸ் எம் கிருஷ்ணாவின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்டவர் விஜி சித்தார்த்தா. இவர் நீண்டநேரமாக மாயமானதால் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காபி உலகின் அரசாக திகழ்ந்த சித்தார்த்தா, சிக்மக்ளூரில் பிறந்தார். இவரது குடும்பம் 140 ஆண்டுகளுக்கு மேலாக காபி தோட்ட தொழிலை செய்து வருகிறார்கள். இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பயின்றார். பின்னர் கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய பங்கு சந்தை தொடர்பான நிறுவனமான ஜே எம் நிதி நிறுவனத்தில் வர்த்தக மேலாண்மை பயிற்சியாளராக தனது தொழிலை மும்பையில் பணிக்கு சேர்ந்தார்.

சிவன் நிறுவனம்
அப்போது அவருக்கு வயது 24 இருக்கும். இரு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர் தொழில் தொடங்கும் நோக்கத்தில் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு பெங்களூர் வந்தார். ரூ 30 ஆயிரத்துக்கு சிவன் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தை வாங்கினார்.

காபி கொட்டைகள்
அது மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமாக வீறு நடை போட்டது. இதையடுத்து அதை வே 2 வெல்த் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனமாக 2000-ஆம் ஆண்டு பெயர் மாற்றினார். 1992-ஆம் ஆண்டு காபி டே என்று அழைக்கப்படும் அமால்கமேடட் பீன் கம்பெனி என்ற காபி கொட்டைகள் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.

வருமானம்
இதையடுத்து காபி கொட்டைகளை கொள்முதல் செய்வதும் கொட்டைகளை வறுப்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த காபி தொழிலை செய்து வந்தார். இந்த தொழில் வெற்றிகரமாக செயல்பட்டது. இவரது தோட்டத்தில் இருந்து 3000 டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த நிறுவனம் 20 ஆயிரம் டன் கணக்கில் வர்த்தகத்தை செய்தது. இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரை பெற்றது. இதையடுத்து அவர் 1996-ஆம் ஆண்டு பெங்களூரில் பிரிகேட் சாலையில் கஃபே காபி டே என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் கிளைகள் தற்போது வியன்னா, செக் குடியரசு, மலேஷியா, நேபாள், எகிப்து ஆகிய நாடுகளில் உள்ளது. கடந்த 2018-ஆம் நிதியாண்டில் அவரது நிறுவனத்தில் வருமானம் 2, 016 கோடியாக இருந்தது.

தொழில்நுட்ப நிறுவனம்
பின்னர் 1999-ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பிரபலம் அசோக் சூடா மற்றும் 10 பேருடன் இணைந்து மைன்ட் டிரீ என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் 340 கோடியை சித்தார்த்தா முதலீடு செய்துள்ளார்.

ஏராளமான தொழில்கள்
இதிலிருந்து 20.4 சதவீத பங்கை எல் அன்ட் டி நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் 3000 கோடி லாபம் ஈட்டினார். காபி தொழிலை தவிர்த்து உலக தொழில்நுட்ப பூங்கா என அழைக்கப்படும் டங்கிலின் டெவலப்மென்ட்ஸ், சிகால் லாஜிஸ்டிக்ஸ், காபி டே ஹோட்டல்கள், ரிசார்ட்களை தொடங்கினார்.

இலக்கு
மார்ச் 2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,752 கஃபேக்கள் உள்ளன. 48 ஆயிரம் காபி தயாரிக்கும் இயந்திரங்களும், 403 காபி தூள் விற்பனை கடைகளும் உள்ளன. சித்தார்த்தா நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 30 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். காபி டேவின் ஆண்டு வருமானம் ரூ 4,264 கோடியாகும். இதன் மூலம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ 1,814 கோடி லாபம் கிடைத்தது. வரும் 2020-ஆம் நிதியாண்டில் 2,250 கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா 12 ஆயிரம் ஏக்கர் காபி தோட்டத்துக்கு சொந்தகாரர் ஆவார்.

வருமான வரி சோதனை
காபி தோட்டத்தில் தன்னை ரிலாக்ஸ் செய்ய நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பொறியியல் பட்டமோ எம்பிஏவோ படிக்காமல் தனது தொழிலில் ஏராளமான சாதனைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சித்தார்த்தா வரி ஏய்ப்பு செய்ததாக புகாரின் பேரில் 2017-ஆம் ஆண்டு சென்னை, பெங்களூர், மும்பை, சிக்மக்ளூர் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற போதுதான் இவருக்கு சிக்கல் எழுந்தது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications