‛‛மனிதராக இருக்கவே தகுதியற்றவர்’’.. பிரதமர் மோடியை தடித்த வார்த்தைகளால் விமர்சித்த நடிகர் கிஷோர்
பெங்களூர்: பிரதமர் மோடி பெரிய பொய்யர் என்றும் முட்டாள் என்றும், மனிதராக இருக்கவே தகுதியில்லாதவர் என்றும் நடிகர் கிஷோர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்படுகிறதோ அதேபால் பிரதமர் மோடியின் அதிகாரப்பசி மற்றும் போலி இந்துத்துவாவால் இந்த மதமும் இழிவுப்படுத்தலாம் என கோபத்தை கொப்பளித்துள்ளார். இதனால் பாஜகவினர் நடிகர் கிஷோரை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
கன்னடா, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கிஷோர். இவர் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் அவரது காதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், சார்பட்ட பரம்பரை, பொன்னியின் செல்வன் I, II, ஜெயிலர் உள்பட பல படங்களில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த சில காலமாக நடிகர் கிஷோர் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.மேலும் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்த நடிகர் ஷ்யாம் ரங்கீலாவுக்கு, கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். ஆனால் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனு என்பது தள்ளுபடியாகிவிட்டது. இருப்பினும் கிஷோர் மட்டும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை விடவேயில்லை.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் கிஷோர், பிரதமர் மோடியை மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். அதாவது கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடியின் பேச்சு 2 பாகங்களாக உள்ளது. இந்து மதத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி மே 14, மே 15 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
அந்த பதிவில் தான் நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் நடிகர் கிஷோர், ‛‛ ஆமாம். அவர் (பிரதமர் மோடி) பொது வாழ்க்கைக்கு பொருத்தமானவர் இல்லை. அவர் மனிதனாக இருக்க தகுதியில்லாதவர். அவரை போன்ற ஒருவரின் வாய் மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.
அவரது வார்த்தைகள் மற்றும் செயல்பாடே உலகில் தன்னை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, மூர்க்கவாதி, மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், உணர்வற்றவர், கண்ணியமற்றவர், மக்களுக்கு எதிரான ஆட்சி செய்பவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த எதேச்சதிகாரி இல்லை என்பதை காட்டும். 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த பிறகும் கூட விவசாயிகள், ராணுவம், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளை மேம்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் பற்றி பேசாமல் பொய்களை கூறி வெறுப்புகளை மட்டும் விதைக்கிறார்.
மேலும் கற்பனையான ஷரியா வரிகள், வாக்கு ஜிகாத், இந்த நாட்டு மக்களை ஊடுருவல்காரர்கள் என்று சொல்வது, பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள், கோவில்களை பூட்டிவிடுவார்கள் என்று பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ அதேபோல் அவரால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படலாம்'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும்போது, ‛‛காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் முஸ்லிம்களுக்கு வழங்கிவிடுவார்கள். பெண்களின் தாலி கூட மிஞ்சாது. ராமர் கோவிலை பூட்டி விடுவார்கள். ராமர் கோவில் விழாவை புறக்கணித்த கட்சி காங்கிரஸ். இந்துக்களுக்கு எதிரான கட்சி தான் காங்கிரஸ்'' என விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நடிகர் கிஷோர், பிரதமர் மோடியை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications