35 ரோடுகள் வேண்டாம்.. வாகன ஓட்டிகளே உஷார்! பெங்களூரில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட பேரணி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் பெங்களூரில் 36 கிலோமீட்டர் தொலைவுக்கு ஊர்வலம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் ஊர்வலத்தையொட்டி பெங்களூரில் 35 முக்கிய ரோடுகளை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முதல் 3 நாள் பயணமாக கர்நாடகாவில் பிரமதர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரமதர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசினார்.

இதையடுத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் ஊர்வலம் செல்ல உள்ளார். கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் மட்டும் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் பெங்களூர் மீது பாஜக அதிக அக்கறை காட்ட தொடங்கி உள்ளது.
அதன்படி பெங்களூரில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளை என மொத்தம் 36 கிலோமீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ஊர்வலம் செல்ல உள்ளார். இன்று 26 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஊர்வலத்தையொட்டி 35 முக்கிய ரோடுகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பெங்களூர் மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜ்பவன் ரோடு ரமணமகாஸ்ரீ ரோடு, மேக்ரி சர்க்கிள், ஜேபி நகர் ஆர்பிஐ லே-அவுட், ஜேபி நகர் ரோஸ் கார்டன்ஸ், சிர்ச் சர்க்கிள், டிஆர் மில், ஜேஜே நகர், பின்னி மில் ரோடு, சாலினி மைதான பகுதி, சவுத் என்ட் சர்க்கிள், ஆறுமுகம் சர்க்கிள், புல் டெம்பிள் ரோடு, ராமகிருஷ்ணா மடம், உமா தியேட்டர், பாலேக்காய் மண்டி உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சாம்ராஜ்பேட்டை மெயின் ரோடு கேபி அக்ரஹாரா, மாகடி மெயின் ரோடு, சோழரபாளையா, எம்சி சர்க்கிள், வெஸ்ட் ஆப் சார்ட் ரோடு, எம்சி லே-அவுட் ஒன்றாவது கிராஸ், நாகரபாவி ரோடு, பிஜிஎஸ் மைதானம், ஹாவனூர் சந்திப்பு பசவேஸ்வரா நகர் 8 வது மெயின் ரோடு, 15வது மெயின் ரோடு, சங்கர் மடம் சந்திப்பு, மோடி மருத்துவமனை ரோடு, வெஸ்ட் ஆபர் சார்ட் ரோடு, நவரங் சந்திப்பு, எம்கேகே ரோடு, மல்லேஸ்வரம் சந்திப்பு, சம்பிகே ரோடு, சாங்கி ரோடு உள்ளிட்ட இடங்களுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்ல வேண்டாம் என பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications