2வது நாளாக இன்றும்பெங்களூரில் பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி.. தவிர்க்க வேண்டிய 18 சாலைகள்! லிஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 2வது நாளாக இறுதிக்கட்ட ஊர்வலத்தை நடத்துகிறார். நேற்று 29.5 கிலோமீட்டர் பயணித்த பிரதமர் மோடி இன்று இன்று 6.5 கிலோமீட்டர் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இதனால் பெங்களூர் நகரின் 18 முக்கிய சாலைகளை தவிர்க்க பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

நாளையுடன் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தான் அங்கு பிரதமர் மோடி 3 நாள் பிரசாரத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் முதல் கர்நாடகாவில் மோடி முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று பெங்களூர் நகரில் பிரதமர் மோடி பிரமாண்டமான ஊர்வலம் நடத்தினார்.
பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மோடி நேற்று திறந்த வாகனத்தில் தொகுதிகளில் ஊர்வலம் சென்றார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது. மொத்தம் 29.5 கிலோமீட்டர் தொலைவு பயணித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அப்போது ‛‛மோடி.. மோடி..'' கோஷத்துடன் பிரதமர் மோடி மீது மலர்களை தூவி மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் தான் இன்று இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி பெங்களூரில் 2வது நாளாக பிரமாண்ட பேரணியை மேற்கொள்ள உள்ளார். இந்த பேரணி காலை 10 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை 1.30 மணிநேரம் நடைபெற உள்ளது. பெங்களூர் நியூ திப்பசந்திரா ரோட்டில் தொடங்கும் பிரதமர் மோடியின் பேரணி ட்ரினிட்டி சர்க்கிள் வரை மொத்தம் 5 சட்டசபை தொகுதிகளில் நடைபெற உள்ளது.
அதன்படி பார்த்தால் பிரதமர் மோடியின் பேரணி என்ப நியூ திப்பச்சந்திரா மெயின் ரோடு, 80 அடி ரோடு ஜங்ஷன், எச்ஏஎல் 2வது ஸ்டேஜ், 12வதுமெயின் ரோடு ஜங்ஷன், எச்ஏஎல் 2வது ஸ்டேஜ், எச்ஏஎல் 100 அடி ரோடு ஜங்ஷன், சிஎம்எச் ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு, டிரினிட்டி சர்க்கிள் வரை பிரதமர் மோடி ஊர்வலம் நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பேரணியையொட்டி பெங்களூரில் பல்வேறு முக்கிய சாலைகளில் இன்று காலையில் இருந்து பயணிப்பை பொதுமக்கள் 18 முக்கிய இடங்களுக்கு செல்வதை கைவிட வேண்டும் என பெங்களூர் மாநக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக பெங்களூர் மாநகர போக்கவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி விசிட் செய்கிறார். இதனால் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை ராஜ்பவன் ரோடு, மேக்ரி சர்க்கிள், டி சவுடய்யா ரோடு, ரமணமகர்ஷி ரோடு, ஓல்டு ஏர்போர்ட் ரோடு, சுரன்சன்தாஸ் ரோடு, எம்ஜி ரோடு, ஜெகதீஷ் நகர் கிராஸ், ஜேபி நகர் மெயின் ரோடு, பிஇஎம்எல் ஜங்ஷன், இந்திரா நகர் 80 அடி ரோடு, நியூ திப்பச்சந்திரா ரோடு, இந்திரா நகர் காவேரி பள்ளி 100 அடி ரோட்டில் உள்ள 12வது மெயின் சாலை, சிஎம்எச் ரோடு, சுவாமி விவேகானந்தா ரோடு, ஆதர்ஷ் ஜங்ஷன் 17 வது ‛எப்' கிராஸ், ஹலசூர் மெட்ரோ நிலையம், டிரினிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
******
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications