பிரபல டிவி தொகுப்பாளினி அபர்ணா புற்றுநோய் பாதிப்பால் மரணம்.. ரசிகர்கள் சோகம்!
பெங்களூர்: பிரபல டிவி தொகுப்பாளினி அபர்ணா புற்று நோய் பதிப்பால் மரணமடைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னட திரையுலகில் பிரபலமான நடிகையாகவும் அபர்ணா வலம் வந்தார்.
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகையும் தொகுப்பாளினியுமாக வலம் வந்த அபர்ணா புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார். அபர்ணாவிற்கு 4-வது ஸ்டேஜ் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார்.
கன்னட திரையுலகில் பிரபலமான டிவி தொகுப்பாளினியாக இருந்த அபர்ணாவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். 1984 ஆம் ஆண்டு வெளியான மஸ்ண்டா ஹுவு படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் ஆன அபர்ணா, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
ஷிவா ரஜ்குமாரின் இன்ஸ்பெக்டர் விக்ரம் படத்திலும் அபர்ணாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 1990-களில் டிவி தொகுப்பாளினியாகவும் சின்னத்திரையில் கால் பதித்த அபர்ணா, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அபர்ணாவின் மரணம் கன்னட பொழுதுபோக்கு துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது ரசிகர்களும் சக நடிகர் - நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அபர்ணாவுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகை பத்மஜா ராவ், அபர்ணா மறைவு செய்தி அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக சந்திக்கவில்லை. அவரது மறைவு செய்தி பேரிடியாக உள்ளது.
நான் நிலைகுலைந்து போயுள்ளேன்" என்று கூறியுள்ளார். பெங்களூர் நம்ம மெட்ரோவில் பயணிகளுக்கு வெளியாகும் அறிவிப்புகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவரும் அபர்ணாதான். இதனால், மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியிலும் இவரது குரல் பரிட்சயமாக இருந்தது.












Click it and Unblock the Notifications