Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பேரால் மாறும் நிலவரம்.. கர்நாடகாவில் பின்தங்கும் காங்., முந்தும் பாஜக.. பரபர கருத்துகணிப்பு! ஆஹா

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என பல்வேறு கருத்து கணிப்புகள் கூறி வந்தன. குறிப்பாக பாஜக மேற்கொண்ட உட்கட்சி சர்வேயிலும் காங்கிரஸ் கட்சியின் கை தான் ஓங்கி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் தற்போது புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‛கதர்' கட்சி கலக்கமடைந்துள்ள நிலையில் ‛தாமரை' கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் மக்களின் மனநிலை மாறுதலுக்கான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கலாம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த 3 கட்சிகளுக்கு மாற்றாக ஆம்ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் கால்பதிக்க உள்ளது.

கர்நாடகா கருத்து கணிப்புகள்

கர்நாடகா கருத்து கணிப்புகள்

கர்நாடகாவுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட கட்சியினர் தேர்தல் பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

புதிய கருத்து கணிப்பு

புதிய கருத்து கணிப்பு

இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறி வருகின்றன. இருப்பினும் பல கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகலாம் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது ‛பாப்புலர் போல்ஸ்' புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. அதில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் போல்ஸ்

பாப்புலர் போல்ஸ்

அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பாப்புலர் போல்ஸ்(Popular Polls) எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. 2022 நவம்பர் மாதம் 10ம் தேதி முதல் 2023 ஜனவரி 30ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடந்தது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் வசித்து வரும் 1 லட்சத்து 12 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாப்புலர் போல்ஸ் கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

ஹைதராபாத், மும்பை கர்நாடகா

ஹைதராபாத், மும்பை கர்நாடகா

இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் பிராந்தியம் வாரியாக கட்சிகள் பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹைதராபாத் -கர்நாடகா பிராந்தியத்தில் பீதர், பல்லாரி, கொப்பல், ராய்ச்சப்பூர், கலபுரகி, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 20 முதல் 22 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக 12 முதல் 15 இடங்களிலும், ஜேடிஎஸ் 5 முதல் 7 இடங்களிலும் மற்றவர்கள் 2 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக மும்பை -கர்நாடகா பிராந்தியத்தில் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, ஹாவேரி, தார்வார், கதக் ஆகிய மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. இங்கு மொத்தம் 44 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 16 முதல் 18 இடங்களிலும், பாஜக 22 முதல் 24 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 4 முதல் 6 இடங்களிலும் மற்றவர்கள் 1 முதல் 2 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மத்திய கர்நாடகா-கடலோர கர்நாடகா

மத்திய கர்நாடகா-கடலோர கர்நாடகா

இதேபோல் மத்திய கர்நாடகா என அழைக்கப்படும் சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரோ, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் பாஜக தான் முன்னிலையில் உள்ளது. இங்கு மொத்தம் 27 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 7 முதல் 9 இடங்களும், பாஜகவுக்கு 17 முதல் 19 இடங்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 8 முதல் 9 இடங்களும் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகா மாவட்டங்களான தட்சின கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் மீண்டும் பாஜகவின் கோட்டையாக இருக்கும் என்பதையே இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இங்கு மொத்தம் 19 தொகுதிகள் இருக்கின்ற. இதில் பாஜகவுக்கு 12 முதல் 14 இடங்களும், காங்கிரசுக்கு 5 முதல் 7 இடங்களும், ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு கர்நாடகா-பெங்களூர் நகர்

தெற்கு கர்நாடகா-பெங்களூர் நகர்

மேலும் தெற்கு கர்நாடகா பிராந்தியத்தியமான மைசூர், சிக்பள்ளாப்பூர், ஹாசன், மண்டியா, கோலார், ராமகர், சாம்ராஜ்நகர், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்ளை பொறுத்தமட்டில் ஜேடிஎஸ் முன்னிலையில் உள்ளது. இங்கு ஜேடிஎஸ் கட்சிக்கு 25 முதல் 30 இடங்களும், காங்கிரசுக்கு 21 முதல் 23 இடங்களும், பாஜகவுக்கு 11 முதல் 13 இடங்களும், மற்றவர்களுக்கு 1 முதல் 2 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது. பெங்களூர் நகரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 முதல் 16 இடங்களும், பாஜகவுக்கு 12 முதல் 14 இடங்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 1 முதல் 2 இடங்களும், மற்றவர்களுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பெங்களூர் புறநகர் பிராந்தியத்தி்ல 4 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலைில் காங்கிரஸ், பாஜகவுக்கு தலா 1 முதல் 2 இடங்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரசுக்கு எவ்வளவு இடம்?

பாஜக, காங்கிரசுக்கு எவ்வளவு இடம்?

இதன்படி பார்த்தால் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 80 முதல் 84 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 82 முதல் 87 இடங்களிலும், ஜேடிஎஸ் 42 முதல் 45 இடங்களிலும், மற்றவர்கள் 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் பாஜகவின் உள்கட்சி சர்வேக்களில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தகவல் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது. ஆனால் தற்போதைய இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பின்னடைவு ஏன்?

காங்கிரஸ் பின்னடைவு ஏன்?

மேலும் இந்த கருத்து கணிப்பில் பாஜக முந்தி செல்வதற்கும், காங்கிரஸ் கட்சி பின்தங்கி இருப்பதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது வரும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகாவில் இன்னும் மோடி மீதான நம்பிக்கை என்பது இருக்கிறது. மேலும் லிங்காயத் சமுதாயத்தினர் அதிருப்தியில் இருந்தாலும் கூட பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் தான் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் வியூகங்கள் அக்கட்சிக்கு பலமாக மாறலாம். மாறாக ஜேடிஎஸ் கட்சி வழக்கம்போல் ஓல்டு மைசூர் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+