Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட கருமமே.. ஆபாச வீடியோ.. "சீன் படம்".. சட்ட மேலவையில் உட்கார்ந்து கொண்டு.. சிலாகித்த காங். எம்எல்சி

அவையில் ஆபாச படம் பார்த்ததாக காங்கிரஸ் எம்எல்ஏசி மீது புகார் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்ட மேலவை கூட்ட தொடர் நடந்து கொண்டிருந்தபோது, அவையில் காங்கிரஸ் எம்எல்சி ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டு பண்ணி வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவை கூட்ட தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று நடந்த சட்டமேலவை கூட்ட தொடரில் காங்கிரஸ், பாஜக மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்சிக்கள் என எல்லாருமே கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காங்கிரஸ் எம்எல்சி பிரகாஷ் ராத்தோடு தன்னுடைய செல்போனையே உற்று பார்த்து கொண்டிருந்தார்... இதை அங்கிருந்த மீடியாக்கள் கவனித்து விட்டன.. ஏனென்றால், கூட்டம் நடக்கம்போது யாரும் இப்படி செல்போனை எடுத்து பார்ப்பது இல்லை.. அதனால், பிரகாஷ் செல்போனில் என்ன பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை ஜூம் செய்தனர்..

 வீடியோக்கள்

வீடியோக்கள்

அப்போதுதான் அந்த மேட்டர் தெரிந்தது.. ஆபாச வீடியோக்களையும் போட்டோக்களையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார்.. இதை மீடியாக்கள் கேமராவிலும் பதிவு செய்து விட்டனர்... அதாவது அவருடைய செல்போன் கேலரியில் ஏற்கனவே சில வீடியோக்கள், போட்டோக்களை அவர் வைத்திருந்திருக்கிறார்.. இங்கு அசெம்பளியில் உட்கார்ந்து அவைகளை, சாவகமாசமாக ஒவ்வொரு போட்டோவாக எடுத்து டெலிட் செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த ஆபாசமும் டபக்கென வந்துவிட்டது.

 பாஜக

பாஜக

சரி, யதேச்சையாக வந்துவிட்டாலும், அதை கடந்து செல்வார், அல்லது டெலிட் செய்வார் என்று பார்த்தால், அதிலேயே மூழ்கி விட்டதாக சொல்லப்படுகிறது.. இந்த விஷயம்தான் வெளியே தெரிந்து பரபரப்பாகிவிட்டது.. அதுவும் பாஜகவுக்கு வசமாக ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.. "மக்கள் பிரச்சனையை பற்றி விவாதிக்க வேண்டிய அவையில், இப்படி பொறுப்பற்ற முறையில் செல்போனில் ஆபாச வீடியோ பார்ப்பது என்பது, மேலவை மாண்பை குறைப்பதாகும்" என்று மஜத, பாஜக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

வீடியோ

ஆனால், இதை பற்றி பிரகாஷ் ரத்தோட் செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னுடைய செல்போனில் நிறைய வீடியோக்கள் இருந்தன... அதை டெலிட் பண்ணி கொண்டிருந்தேன்... அந்த நேரம், என் கேள்விக்கு செல்போனில் டிஜிட்டலில் பதில் அனுப்பி இருந்தனர். அந்த பதிலைதான் தேடிக் கொண்டிருந்தேன். நான் எந்த ஆபாச வீடியோவையும் பார்க்கவில்லை. ஒருவேளை எனக்கு தெரியாமல் ஏதாவது வீடியோவை பார்த்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இப்படித்தான், சில வருஷத்துக்கு முன்பு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் சிசிபாட்டீல், கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி ஆகியோர் இதுபோலவே ஆபாச வீடியோ பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.. அதுவும் தேசிய அளவில் எதிரொலித்தது.. 3 பேருமே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.. ஆனாலும், அவர்களில் லட்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.. இப்போது காங்கிரஸ் உறுப்பினர் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளது, எப்படியெல்லாம் கர்நாடக அரசியலின் போக்கை மாற்ற போகிறதோ? பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+