"கரெக்ட்டா" நேரம் பார்த்து வரும் பிரஜ்வல் ரேவண்ணா.. மே 31ம் தேதி விசாரணைக்கு ஆஜர்.. பரபர கர்நாடகா
பெங்களூர்: பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.. இங்குள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபமெடுத்துள்ளன.

குற்றச்சாட்டு: ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் போட்டோக்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இது தொடரர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அவர் திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.. அதாவது ஏப்ரல் 26ம் தேதி இரவு, தூதரக பாஸ்போர்ட் பயன்படுத்தி ஜெர்மனி சென்று விட்டதாக சொல்கிறார்கள். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது... கர்நாடக அரசியலையே இந்த விவகாரம் தலைகீழாக மாற்றிவிட்ட நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
வாரண்ட்: எனினும் அவரை கைது செய்ய சிபிஐ புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.. மற்றொருபக்கம் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.. இதற்குநடுவில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இப்படி எல்லா பக்கமும் நெருக்கடி கூடியிருக்கும் நிலையில், திடீரென பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில், வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் மேலும் சொல்லி உள்ளதாவது:
திட்டமிட்ட பயணம்: "என்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, குமாரசாமி, மாநில மக்கள், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்த போது, என் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை... எஸ்ஐடியும் அமைக்கவில்லை... அதனால், ஏப்ரல் 26ம் தேதி வெளிநாட்டுக்கு சென்றேன்.. இது ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம்தான்.
4 நாட்களுக்கு பிறகுதான் எனக்கு தகவல் தெரிந்தது. எனினும், எஸ்ஐடி வழங்கிய நோட்டீசுக்கு, எக்ஸ் வலைதளம் வாயிலாகவும், என் வழக்கறிஞர்கள் மூலமாகவும் 7 நாட்கள் கால அவகாசம் கேட்டு பதில் அளித்திருந்தேன்.. ஆனால், அடுத்த நாளே, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், என்னுடைய விஷயத்தை பகிரங்கமாக பேச ஆரம்பித்துவிட்டதால், அரசியல் சூழ்ச்சி நடப்பதை தெரிந்து கொண்டேன்.. இது எனக்கு மன அழுத்தத்தையும் தந்துவிட்டதால், தனிமைப்படுத்தப்பட்டேன்.
பரபரப்பு: வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு, எஸ்ஐடி முன்பு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது... கண்டிப்பாக என் மீதான பொய் புகாரில் இருந்து வெளியே வருவேன்' என்று கூறியிருக்கிறார்.
மே 30-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், மே 31-ம் தேதி பிரஜ்வால் ஆஜராக உள்ளதாக கூறியிருப்பது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிடடது.. வரும் மே 30-ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், மறுநாளே மே 31-ம் தேதி பிரஜ்வால் நேரில் ஆஜராக உள்ளதாக கூறியிருப்பது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications