கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: இந்தியா கூட்டணிக்கும், காங்கிரஸுக்கும் ஆதரவளித்து வந்த நடிகரும், சமூக ஆர்வலருமாகிய பிரகாஷ் ராஜ் தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவளித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெறும் இக்கட்சியின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்கிறார்.
கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் நடத்தியிருந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றிருந்தது.

இப்படி இருக்கையில், இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவின் ஃப்ரீடம் பூங்காவில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் கலந்து கொள்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், "இந்த முக்கியமான அமைதிப் போராட்டத்தில் பங்கேற்க நான் பெங்களூரு செல்கிறேன். அரசின் தோல்விகளுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய அனைவரும் எங்களுடன் இணையுங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலோட்டமாக பார்த்தால் இந்த போராட்டம் பாஜக அரசுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்துத்துவா என்கிற கொள்கையை தவிர காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு என இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, இன்று பாஜகவுக்கு எதிராக நடக்கும் போராட்டம் நாளை கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு எதிராக நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே இந்த போராட்த்தை காங்கிரஸ் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனவேதான் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் நடந்தபோது காங்கிரஸ் பெரியதாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
சூழல் இப்படி இருக்கையில், இன்று பெங்களூரில் நடக்கும் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வரை இந்தியா கூட்டணிக்கும், அதற்கு தலைமை வகிக்கும் காங்கிரஸுக்கும் ஆதரவாக இருந்த பிரகாஷ் ராஜ் திடீரென கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது காங்கிரஸுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்காகத் தமிழில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதற்கு கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications