பக்கு பக்குன்னு முழிக்குது பாருங்க.. இப்படித்தான் இருக்குது பாஜக லட்சணம்.. பிரகாஷ் ராஜ் பொளேர்
ராஜஸ்தான் பெண் வேட்பாளர் ரஞ்சிதா கோலியை பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
பெங்களூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறும் வீடியோ ஒன்றை டிவீட் செய்துள்ள பிரகாஷ் ராஜ், இப்படித்தான் இருக்கிறது பாஜகவின் லட்சணம் என்று கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு தெற்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

அறிவை பாருங்கள்
அன்புள்ள மக்களே. பாஜக சார்பில் போட்டியிடும் இந்த வேட்பாளரைப் பாருங்கள். தொகுதியின் பிரச்சினைகள் குறித்த இவரது அறிவைப் பாருங்கள். அதற்கான தீர்வு குறித்த இவரது ஞானத்தைப் பாருங்கள். இவர் போன்றவர்களால், இவரைப் போன்ற அறிவு உள்ளவர்களால் இந்த நாட்டை எப்படி உயர்த்த முடியும். இவரைப் போன்றவர்கள் சேர்ந்துதான் இந்த நாட்டின் காவலரையும் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
|
ரஞ்சிதா கோலி
சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள வேட்பாளரின் பெயர் ரஞ்சிதா கோலி. இவர் பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்.

சமாளிக்கிறார்
தொகுதி பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கேட்கிறார். அதற்கு பாதி நேரம் ரஞ்சிதா கோலி பதில் தெரியாமல் விழிக்கிறார், திக்கித் திணறி எதையோ பேசி சமாளிக்கப் பார்க்கிறார்.
|
வைரல் ட்வீட்
இதை வைத்துத்தான் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டில் சாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக தனது டிவீட்டில் ராஜஸ்தான் என்பதற்குப் பதிலாக உ.பி என்று பிரகாஷ் ராஜ் போட்டு விட்டார். இதை வைத்து அவரை பாஜகவினர் வறுத்தெடுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து தனது டிவீட்டில் திருத்தம் செய்து புதிய டிவீட் வெளியிட்டார் பிரகாஷ் ராஜ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications