விண்வெளி செல்லும் மனிதர்கள்.. தயாரான ககன்யான் மிஷன்! மாஸ் காட்டும் இந்தியா.. இஸ்ரோ சூப்பர் அப்டேட்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை அடைய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த மிஷனின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வெற்றி: கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஏக்கம்: இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது. அதாவது, இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.
சோவியத் ரஷ்யா: சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். கடந்த 1917ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. நிலவில் முதலில் கால் வைத்தது மட்டும்தான் அமெரிக்கா செய்த ஒரே சாதனை. மற்றபடி முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளிக்கு முதலில் உயிரினங்களை அனுப்பியது, மனிதர்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஏராளமான சாதனைகளை செய்தது.
ககன்யான்: மட்டுமல்லாது இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை சோவியத் ரஷ்யா தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது. அப்படி இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தவர்தான் ராகேஷ் ஷர்மா. இதன் பின்னர் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. எனவே இந்த ஏக்கத்தை போக்க ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
வாய்ப்பு: இது குறித்து மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்டேஸ்வரன் கூறுகையில், "சர்வதேச அளவில் சீனா உட்பட பல நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவிட்டது. ஆனால் இந்தியா அனுப்பவில்லை. இதற்கான ஒரு முயற்சிதான் இந்த ககன்யான் திட்டம். மட்டுமல்லாது எதிர்வரும் 2025ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் கலைக்கப்படுகிறது. இந்த மையம் பழையதாகிவிட்டது என்பதால் புது மையம் உருவாக்கப்படுகிறது.
இந்தியா: இந்த புது விண்வெளி மையத்தில் நாம் இடம் பெற வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் இதற்கு மனிதர்களை நாம் விண்வெளிக்கு அனுப்பிய அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை நம்மால் எழுப்ப முடியும். எனவே இந்த வகையில் ககன்யான் திட்டம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இடம் கிடைத்துவிட்டால், நாம் விண்வெளி ஆய்வு துறையில் புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம்.
அப்டேட்: இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கான தயாரிப்பு பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அப்டேட் கொடுத்திருக்கிறது. அதாவது விண்வெளிக்கு சென்ற பின்னர் வீரர்கள் மீண்டும் பூமிக்கு பத்திரமாக தரையிறங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் க்ரூ மாட்யூல் (CM). இதனை விரைவில் சோதித்து பார்க்க இருப்பதாக இஸ்ரோ x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சோதனை: ஆனால் இந்த மாதம் இறுதியில் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையின்போது டெஸ்ட் ராக்கெட் பயன்படுத்தப்படும். அதாவது ஒற்றை என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் ஆளில்லாத க்ரூ மாட்யூலை வானுக்கு கொண்டு செல்லும். பின்னர் சுமார் 17 கி.மீ உயரத்திலிருந்து இது கீழே விடப்படும். இந்த செயல்பாட்டில் க்ரூ மாட்யூலின் வேகம் 1.5 மாக் அளவாக இருக்கும். அதாவது சுமார் மணிக்கு 1,470 கி.மீ வேகத்தில் மாட்யூல் பூமியை நோக்கி விழும்.
ஆய்வு: ஒரு கட்டத்தில் மாட்யூலில் உள்ள பாராசூட் விரிந்து வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து வங்க கடலில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் பத்திரமாக தரையிறங்கும். இதை இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழு மீட்டு கரைக்கு கொண்டு வரும். கரைக்கு வந்த பின்னர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்தில் இந்த மாட்யூல் பரிசோதிக்கப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது. இந்த திட்டத்தில் எந்த பிசிறும் தட்டவில்லை எனில், மிக நிச்சயமாக இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications