நீ இந்துவா முஸ்லீமா? "மாணவர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்.." கார்கே பகிர்ந்த பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சாலையில் சென்று கொண்டிருந்த அப்பாவி மாணவர்களை பிடித்து, உங்கள் பெயர் என்ன.. மதம் என்ன.. ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டு தேச விரோத சக்திகளை ஆதரிக்கிறீர்கள் என ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கேட்டு மிரட்டுவதாக சாடியுள்ள கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த மாணவர் போராட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் பிரதான கோரிக்கையான தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது நடந்துள்ளது. இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. தொடர்ந்து பல அமைப்புகள் வரிசையாக போராட்டங்களை வாபஸ் பெற்று வருகிறது.

Priyank Kharge RSS neet

பிரியங்க் கார்கே

இதற்கிடையே பாஜக அரசை விமர்சித்து கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை குறிவைத்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரியங்க் கார்கே பகிர்ந்துள்ள வீடியோவில்.. வெள்ளை நிற குர்தா மற்றும் காவி துண்டு அணிந்த ஒருவர், காருக்குள் உட்கார்ந்திருந்தபடி, அருகே நின்றிருந்த இளைஞர்களிடம் கேள்விகளை கேட்கிறார். அவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். வீடியோவில், அந்த நபர் முதலில் ஒரு மாணவரின் பெயரை கேட்கிறார். மாணவர் தனது பெயர் ஆயுஷ் வானியா என்று சொல்கிறார்.

மிரட்டல்

நீ இந்துவா முஸ்லீமா என கேட்கிறார். அவர் இந்து என்றும் கூறுகிறார். அதன் பிறகு அந்த காவி துண்டு நபர், "எதற்காக இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறாய்?", "தேசவிரோத கோஷங்களை ஏன் ஆதரிக்கிறாய்?" என்று கேட்டார். "எந்த ஊர்?", "இங்கு என்ன செய்கிறாய்?", "என்ன படிக்கிறாய்?" என்றும் அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். அதற்கு அந்த இளைஞர், தனது சகோதரியைப் பார்க்க வந்ததாகவும், எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை என்றும் அமைதியாக விளக்கமளிக்கிறார்.

தாக்குதல்

ஆனால், மாணவரின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் அந்த நபர், அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கேள்விகளை எழுப்பி தொடர்ந்து மிரட்டும் வகையில் பேசுகிறார். அருகே இருந்த மற்றொரு மாணவரையும் பிடித்து இதுபோல கேட்கிறார். ஒரு கட்டத்தில் காரின் ஜன்னல் வழியாக அவரது சட்டையையும் பிடித்து இழுத்து மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் செய்கிறார். பின்னர், கேமராவை பார்த்து மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்துகிறார். அச்சுறுத்தலுக்கு பயந்து அந்த மாணவர் மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகும், "இனி இந்த பக்கமே உன்னை பார்க்கக் கூடாது" என்று எச்சரித்துவிட்டு அவரை தள்ளிவிடுகிறார்.

பிரியங்க் கார்கே

இந்த வீடியோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரியங்க் கார்கே, "வாழ்த்துகள் நரேந்திர மோடி, அமித் ஷா. இந்திய இளைஞர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்ற உங்கள் அழைப்பை உங்கள் காரியகர்த்தாக்கள் உண்மையாகவே பின்பற்றுகிறார்கள் போலிருக்கிறது. மோகன் பகவத், உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.. அவர்கள் உங்கள் அறிவுரையை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் இதை தான் கற்று தருகிறார்களா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விளக்கம் இல்லை

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், மாணவர் போராட்டங்கள் கடந்த ஒரு மாதாகவே நடந்து வரும் சூழலில், அதில் எங்காவது எடுக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரியங்க் கார்கே, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை நேரடியாக விமர்சித்திருப்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக இதுவரை பாஜக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+