ஆசிரியர் தலையில் குப்பைத் தொட்டியை கவிழ்த்த மாணவர்கள்.. வைரல் போட்டோ.. விசாரணைக்கு உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் தேவனாகிரி மாவட்டத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் அவரது தலையில் குப்பைத் தொட்டியை கவிழ்த்து அத்துமீறிய சம்பவம் தொடர்பாக அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவனாகிரி மாவட்டம் சன்னகிரி நகரில் நல்லூரில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு கடந்த 3ஆம் தேதி ஆசிரியர் பாடம் நடத்த பள்ளி வகுப்பறைக்குள் வந்துள்ளார்.
அப்போது அவர் அங்கிருந்த குட்கா காலி பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து உள்ளே வந்த ஆசிரியர், இந்த குட்கா பாக்கெட்டுகளை யார் பயன்படுத்தியது? என கேட்டுள்ளார். இது போல் கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.

மாணவர்கள் கூச்சல்
போதை வஸ்துகளை பயன்படுத்தக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து அவர் பாடம் நடத்த தொடங்கினார். அப்போது கரும்பலகையில் அவர் எழுதி கொண்டிருந்த போது ஒரு சில மாணவர்கள் கூச்சலிட்டனர்.

குப்பைத் தொட்டி
அவர் திரும்பி பார்த்த போது அமைதியாக இருந்தனர். இது போல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர் பாடம் நடத்தி கொண்டிருந்த போது வகுப்பறையில் இருந்த குப்பைத் தொட்டியை ஆசிரியரின் தலை மீது கவிழ்த்தனர்.

வைரல் போட்டோ
இதை அங்கிருந்த ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறுகையில், சன்னகிரியில் உள்ள நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் சீண்டியதை பொறுத்துக் கொள்ள முடியாது.

கல்வித் துறை
கல்வித் துறையும் காவல் துறையும் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. நாங்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக உள்ளோம் என்றார். மாணவர்கள் இத்தனை செய்தாலும் அந்த ஆசிரியர் அவர்களது எதிர்காலம் கருதி காவல் துறையில் புகார் அளித்த மறுத்துவிட்டாராம்.

மாணவர்கள்
ஆங்காங்கே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் தங்கள் வீட்டு வேலைகளை செய்ய வைப்பதும் உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆசிரியர் இருக்கும் நிலையில் மாணவர் சமுதாயம் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications