அடிக்கடி வந்து சென்ற ஆண்கள்.. விபசார புகாரில் தாய் - மகளின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்திய மக்கள்
பெங்களூர்: பெலகாவியில் தாயும், மகளும் வசித்து வரும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றனர். இதனால் அவர்கள் விபசாரம் நடத்துவதாக எழுந்த சந்தேகத்தால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் தாக்கி ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தினர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே மாலமாருதி போலீஸ் எல்லைக்குட்பட்ட வடராவாடி கிராமத்தில் வசித்து வருபவர் 60 வயது பெண். இவரது மகளுக்கு 29 வயது ஆகிறது. வீட்டில் இவர்கள் 2 பேரும் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் சமீபத்தில் அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவர் வசிக்கும் வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்று உள்ளனர்.
இதனால் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்போருக்கு சந்தேகம் எழுந்தது. தாயும், மகளும் சேர்ந்து ஏதோ தவறான செயலில் ஈடுபடுவதாக அவர்கள் நினைத்தனர். இதனால் அவர்கள் தாய் - மகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். அப்போது இருவரும் வீட்டில் விபசாரம் நடத்தலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்தனர்.
இதனால் அக்கம்பக்கத்தினர் ஒன்றாக சேர்ந்து அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தனர். ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்ததால் தாயும், மகளும் அதிர்ச்சியடைந்தனர். ஏன் வந்தீர்கள்? என்று அவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள், வீட்டில் விபசாரம் செய்கிறீர்கள் என்று கூறி இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தி வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் சம்பவம் குறித்து மாலமாருதி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் பெலகாவி நகர போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தனர்.
அந்த புகாரில், ‛‛எங்களை அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் தாக்குதல் நடத்தி ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தி உள்ளனர். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதோடு எங்களை தாக்கி அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி 115 (2), 3(5), 33, 352, 75 என்று மொத்தம் 5 பிரிவுகளில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications