Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம் வயதிலேயே மாரடைப்பு.. அடுத்தடுத்து 2 நடிகர்களின் மரணம்.. சினிமா உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த ஒரே வருடத்தில் கன்னட திரையுலகில் இரண்டு பெரும் நட்சத்திரங்கள் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாரடைப்பு காரணமாக இன்று கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார்.

Recommended Video

    Kannada நடிகர் Puneeth Rajkumar சிகிச்சை பலனின்றி காலமானார் | #RIPPuneeth

    கன்னட உலகை இவரின் மரணம் உலுக்கி உள்ளது. புனித் ராஜ்குமாருக்கு காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுயநினைவை இழந்த புனித் ராஜ்குமார் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    காலை 11. 40 மணி அளவில் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு தொடர் சிகிச்சை தரப்பட்டும் பலன் இல்லாத நிலையில் சில மணி நேரங்களுக்கு அவர் முன் மரணம் அடைந்தார்.

    மரணம்

    மரணம்

    கன்னட உலகில் கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் ஏற்படும் இரண்டாவது பெரிய மரணம் ஆகும் இது. கடந்த வருடம்தான் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். இவர் பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவிற்கு கடந்த ஜூன் 6ம் தேதி மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அன்றைய தினமே மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். நல்ல உடற்கட்டு கொண்ட, பிட்டான நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் மரணம் அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வயது என்ன

    வயது என்ன

    சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்த போது அவருக்கு வயது வெறும் 35தான். இந்த நிலையில்தான் 46 வயதே நிரம்பிய புனித் ராஜ்குமாரும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணமாக மரணம் அடைந்துள்ளார். Cardiac Arrest என்பது திடீரென இதயம் நிற்கும் பாதிப்பு ஆகும். அதாவது இதயம் திடீரென செயல்படுவது நின்று போகும். இன்று புனித் ராஜ்குமார் மருத்துவமனை கொண்டு வரப்பட்ட போது அவருக்கு இதய துடிப்பு இல்லை. இப்படி இதயம் நிற்கும் போது உடனே அதை செயல்பட வைக்க சிகிச்சை தரப்படும். இந்த சிகிச்சையும் அவருக்கு பலன் தரவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    மருத்துவ காரணம்

    மருத்துவ காரணம்

    பல்வேறு மருத்துவ காரணம், ஹார்ட் பெயிலியர், ஹார்ட் அட்டாக் ஆகியவை காரணமாக கூட Cardiac Arrest ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. உடனடியாக சிகிச்சை தரவில்லை என்றால் மரணம் ஏற்படும். நல்ல வாழ்க்கை முறை, உடல் நலம் பேணுதல் போன்ற நடைமுறைகள் இருந்தால் Cardiac Arrest ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால் புனித் ராஜ்குமார் போன்றவர்கள் நல்ல ஃபிட்டான் உடற்கட்டோடு தங்கள் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தியும் கூட Cardiac Arrest காரணமாக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+