தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. புனித் ராஜ்குமாரின் அன்பை கண்டு.. நெகிழ வைக்கும் வீடியோ
பெங்களூர்: மாரடைப்பால் மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான யுவரத்னா படம் ரிலீஸான போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததுடன் அவர்களை திக்குமுக்காட செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
கன்னட பவர்ஸ்டார் 46 வயதான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, நேற்றைய தினம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சுய நினைவற்ற நிலையில் இருந்த அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணிக்கு அவர் காலமானார். இதை அறிந்த ரசிகர்கள், தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜ்குமார் சமாதி
இவரது உடல் கன்டீர்வா ஸ்டுடியோவில் தந்தை ராஜ்குமார் சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இவரது மகள் வந்தவுடன் இறுதி சடங்குகள் தொடங்கும். புனித்தின் ஆசைபடி அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். புனித்தின் இறப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.

அப்பு அப்பு
அங்கு வெளியே நின்று கொண்டு அப்பு அப்பு என கதறி அழுதனர். இன்றும் கான்டீர்வா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். ரசிகர்களிடம் எப்போதும் அன்பு செலுத்தும் புனித் தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் ரசிகர்களுடனேயே கொண்டாடுவது வழக்கம்.

யுவரத்னா
ரசிகர்கள் தன்னை பார்க்க வந்துவிட்டால் எப்போது இருந்தாலும் அவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பத்திரமாக வீடு போய் சேர வேண்டும் என அறிவுறுத்தல்களை வைப்பாராம். ஏப்ரல் 1 ஆம் தேதி யுவரத்னா எனும் கன்னட படம் ரிலீஸானது. இந்த படத்தின் புரமோஷனுக்காக மார்ச் 17 ஆம்தேதி புனித்தின் பிறந்தநாளின் போது தயாரிப்பு நிறுவனம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
|
வீடியோ வைரல்
அந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யுவரத்னா புனித் நடித்த கடைசி படமாகும். அந்த வீடியோவில் நிறைய ரசிகர்கள் ஒவ்வொருவராக வந்து புனித் குறித்து கூறி வருகிறார்கள். அவர்களின் அன்பால் மகிழும் புனித் திடீரென அவர்களின் பின்னால் நின்றுக் கொண்டு சர்பிரைஸ் கொடுத்தார். அது போல் ரசிகர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே புனித் ஏதோ சொல்ல, அந்த ரசிகரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஏதோ சொல்கிறார் என நினைத்து திரும்ப அப்போது புனித் அவரை கட்டி அணைத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

திக்குமுக்காட
அது போல் பெண் ரசிகைகளையும் திக்குமுக்காட வைத்தார். ஒரு கட்டத்தில் திடீரென புனித்தை பார்த்த பெண் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்டார். புனித் குறித்து பேசி கொண்டிருக்கும் போதே ரசிகர்களுக்கு தெரியாமல் பின்னால் நின்று கொண்டிருக்கும் புனித் திடீரென அவர்களுக்கு கொடுப்பது நிச்சயம் ஷாக்கிங்தான். ரசிகர்களும் சிலர் ரியாக்ட் செய்கிறார்கள். சிலர் கனவா நனவா என நம்ப மறுக்காமல் நிற்கிறார்கள்.

சினிமாவில் முகம்
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு சினிமாவில் முகம் தெரிந்து விட்டாலே பந்தா காட்டி வரும் சிலருக்கு மத்தியில் மக்களால் போற்றப்படும் ஒரு பவர் ஸ்டார், இப்படி ரசிகர்களுடன் உடன்பிறப்பாகவே பழகுவதை பார்க்கும் போது தற்போது ரசிகர்களின் கதறலுக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவில் ரசிகர்களின் சிறிய சிறிய உணர்வுகளை பார்த்து புனித் சந்தோஷப்படுகிறார். சுருக்கமாக சொல்ல போனால் புனித்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போனதை விட அவர்களின் ரியாக்ஷனை பார்த்து புனித் மகிழ்ச்சி அடைந்தார் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications