ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலினை தொடர்ந்து குமாரசாமியும் முடிவு.. அதிரடி திருப்பம்!
பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூர்: பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு எதிராக லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து பட்டியலிட இருக்கிறது. 23 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. பல முக்கிய தலைவர்கள் இதில் இருப்பதால் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேள்வி உருவாகி இருக்கிறது.

ஸ்டாலின் கருத்து
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று அவர் கூறினார்.

பல தலைவர்கள் இருக்கிறார்கள்
தற்போது இதுகுறித்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், எங்கள் கூட்டணியில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள் எச்.டி தேவகவுடா, மாயாவதி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் என்று பலர் இதில் இருக்கிறார்கள். கூட்டணியை வழி நடத்த பல தலைவர்களுக்கு தகுதி இருக்கிறது.

முடிவு இதுதான்
ஆனால் எங்கள் கட்சி பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுத்துவிட்டது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்.

நம்பிக்கை இருக்கிறது
பிரதமர் மோடியை எதிர்க்கும் வல்லமை ராகுலுக்கு இருக்கிறது. மோடியை விட ராகுல் திறமையானவர். அவரின் வெற்றிக்காக மஜத கட்சி உழைக்கும். இந்த மெகா கூட்டணியே தேர்தல் நேரத்தில் வெற்றிபெறும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications