"அன்பிற்கு" கிடைத்த வெற்றி! கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ்.. ராகுல் காந்தி என்ன சொன்னார்
பெங்களூர்: கர்நாடக தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வரும் நிலையில், அங்கே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது அன்பினால் கிடைத்த வெற்றி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் இப்போது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று காலை அங்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது 120+ இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

இதன் மூலம் காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியைப் பலரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
ராகுல் காந்தி: கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெறுப்பின் சந்தை மூடப்பட்டுள்ளதாகவும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் கூறினார். மேலும், கர்நாடகாவில் அன்பு வென்றதாகவும் அவர் தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது தொடரும். ஏழைகளின் பிரச்சினைகளுக்காகக் காங்கிரஸ் போராடியது.. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அனைத்து ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும்" என்று அவர் உறுதியளித்தார்.
சரியாகப் போரிட்டோம்: அவர் மேலும் கூறுகையில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கர்நாடகாவில் ஏழைகளின் பிரச்சினைகளுக்காக நாங்கள் போராடினோம். நாங்கள் வெறுப்பு மற்றும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் போரில் ஈடுபடவில்லை" என்றார்
ஏறக்குறைய 140 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் எளிதாகத் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. 244 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக சுமார் 60 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது, இதற்கிடையே கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார்.
யார் முதல்வர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பதில் இப்போதே போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா, டிகி சிவக்குமார் என இருவருமே முதல்வர் ரேஸில் உள்ளனர்.
யார் முதல்வர் என்பது குறித்து அங்கே இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வந்த பிறகு நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே முதல்வர் யார் என்பது குறித்துத் தெரிய வரும்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, அங்கே முதல்வருடன் 3 துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்றே தெரிகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications