Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயது 80.. மல்லிகார்ஜூன கார்கேவை எப்போது வேண்டுமானாலும் கடவுள் எடுத்து கொள்வார்.. பாஜகவால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே எப்போது வேண்டுமானாலும் இறப்பார் எனும் பொருள்படும்படி பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Rajasthan BJP MLA Madan Dilawar says, Congress president Mallikarjun Kharge is 80 years old god can take him any time

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளதால் பாஜக, காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இதற்கிடையே தான் தலைவர்கள் பேசும் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது சமீபத்தில் விவாதத்தை கிளப்பியது.

அதாவது மல்லிகார்ஜூன கார்கே கதக்கில் நடந்த பிரசார கூட்டத்தில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பு போன்றவர். அவரை நக்கினால் இறக்க நேரிடும்'' என தெரிவித்தது சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகாவின் விஜயாப்புரா சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏ பசனகவுடா பட்டீல், ‛‛காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி தான் விஷப்பெண்'' என தெரிவித்தார். இந்த விஷயத்தில் இருகட்சியினரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rajasthan BJP MLA Madan Dilawar says, Congress president Mallikarjun Kharge is 80 years old god can take him any time

இந்நிலையில் தான் ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏவான மதன் திலாவர் என்பவர் மல்லிகார்ஜூன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 80 வயது ஆகிறது. அவரை எப்போது வேண்டுமானாலும் கடவுள் அழைத்து செல்லலாம். ஆனால் அவர் 200 ஆண்டுகள் வரை வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பாஜக எம்எல்ஏ மதன் திலாவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‛‛கர்நாடகா வரலாற்றில் மிகப்பெரிய தலைவராக ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே உள்ளார். இவர் மீதான பிரதமர் பாஜக தலைவர்களின் வெறுப்பு என்பது கேவலமானது. அதோடு ஏற்றுக்கொள்ள முடியாததோடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வரை உயர்ந்துள்ளார்.

கர்நாடக மக்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மல்லிகார்ஜுன கார்கேவை தோல்வியில்லாத தலைவர் என அழைக்கிறார்கள். இது பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். இதனால் தான் அவருக்கு மரணத்தை வழங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் பாஜக எம்எல்ஏ மதன் தலாவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+