Coolie: பெங்களூரில் ரூ.2000க்கு விற்கப்படும் கூலி டிக்கெட்.. தியேட்டருக்கு போனால் நெஞ்சு வலியே வந்திடும் போல
பெங்களூர்: ரஜினி நடிப்பில் வரும் வியாழக்கிழமை கூலி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், பாக்ஸ் ஆபீஸில் கூலி (Coolie tickets) புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்கள் ரூ.2000 வரை விற்கப்படுவதால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தியேட்டர் டிக்கெட் உச்சவரம்பு இருக்கிறது. புதிய படங்களுக்குக் குறிப்பிட்ட விலைக்கு மேல் டிக்கெட் விற்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அதேநேரம் மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இதுபோல எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. குறிப்பாக அண்டை மாநிலமான பெங்களூரில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமலேயே இருந்தது.

கர்நாடக அரசு
ஆனால், அங்குச் சமீபத்தில் தான் டிக்கெட் விலையை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சினிமா டிக்கெட் விலை ரூ.200ஐ தாண்டக்கூடாது என்ற உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் தான் 15 நாட்களில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்பது போன்ற அறிவிப்பு வெளியானது. இருப்பினும், அதன் பிறகு அரசு தரப்பில் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
கூலி படம்
இந்த வாரம் வெளியாகவுள்ள ரஜினிகாந்த்தின் 'கூலி' பட டிக்கெட் விலையைக் கேட்டால் நமக்கெல்லாம் நிச்சயம் தலையே சுத்திவிடும். வரும் வியாழக்கிழமை அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவு நேற்று ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிசர்வேஷன் தொடங்கிய உடனேயே அது சாதனை படைத்துள்ளது.
கர்நாடகாவில் புக்கிங் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பெங்களூரில் கூலி படம் 100 காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்கும். தமிழ்நாட்டில் இதுவரை அதிகாலை சிறப்புக் காட்சி எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம் கர்நாடகாவில் அதிகாலை 6 மணி காட்சி திரையிடப்படுகிறது.
முதல் நாள் டிக்கெட் ரூ.2000
இந்த அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட் விலை தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. எம்.ஜி. ரோட்டில் உள்ள திரையரங்கு ஒன்றில், ரெக்லைனர் இருக்கைகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. மற்ற இருக்கைகள் ரூ.1,500 (கோல்ட்) மற்றும் ரூ.1,000 (சில்வர் மற்றும் லவுஞ்ச்) என விற்கப்படுகின்றன.
அதேபோல தாவரெகரெவில் உள்ள ஒரு தியேட்டரில், டயமண்ட் வகுப்பு இருக்கைகளின் டிக்கெட் ரேட் ரூ.1,000ஆகவும், கோல்ட் வகுப்பு இருக்கைகளின் விலை ரூ.800 ஆகவும் உள்ளன. இந்த இரு தியேட்டர்களில் மட்டுமில்லை, பெங்களூர் முழுவதும் அதிகாலை மற்றும் காலை காட்சிகளுக்கான சராசரி விலை ரூ.400-500 ஆக உள்ளது. மேலும் சில திரையரங்குகள் வரும் நாட்களில் அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை ரூ.1,000க்கும் விற்கும் என தெரிகிறது.
கோரிக்கை
சினிமா டிக்கெட் புக் செயலியை ஓபன் செய்து பார்த்தாலே பெங்களூரில் தியேட்டர் டிக்கெட் விலை எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது தெரிந்துவிடுகிறது. கர்நாடக அரசு உத்தரவிட்ட பிறகும் கூட இந்தளவுக்கு அதிக ரேட்டிற்கு டிக்கெட் விற்கப்படுவது அங்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. சினிமா டிக்கெட் உச்சவரம்பு உத்தரவை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications