‛‛ஆப்பு வைத்த ஆபாச வீடியோ’’.. ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி.. காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெண்களை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைத்ததோடு, வீடியோ காலில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தனித்து களமிறங்கிய நிலையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டது.

prajwal revanna lok sabha election 2024 Hassan Lok Sabha Election result 2024 2024

இதையடுத்து ஏப்ரல்25 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் தலா 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஹாசன் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்பியாக ஜேடிஎஸ் கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் களமிறக்கப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா யார் என்றால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் உடன் பிறந்த அண்ணன்)மகன் ஆவார். இந்நிலையில் தான் ஹாசன் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடக்கும் 2 நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வலைதளங்களில் பரவ தொடங்கியது. ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் அந்த பிரச்சனை விஸ்வரூபமானது.

பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றார். பிரஜ்வல் ரேவண்ணா எம்பி பதவியை வைத்து உதவி கேட்ட பெண்களிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதும், ஆசைக்கு இணங்க வைத்தது அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகபுகார் செய்யப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரிக்க தொடங்கியது. 34 நாட்கள் கழித்து கடந்த 20ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் எஸ்ஐடி கஸ்டடியில் உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று ஹாசன் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலையில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 5 லட்சத்து 99 ஆயிரத்து 832 ஓட்டுகளை பெற்று முன்னிலையில் இருந்தார். உள்ளார். ஜேடிஎஸ் கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணா 5 லட்சத்து 67 ஆயிரத்து 886 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்தார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 31 ஆயிரத்து 946 ஆகும். அதாவது பிரஜ்வல் ரேவண்ணாவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேல் 31,946 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார். இதேநிலை நீடித்தால் பிரஜ்வல் ரேவண்ணா அங்கு தோற்கடிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில் தான் மாலை 5 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார். பிரஜ்வல் ரேவண்ணா மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 339 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம் படேல் 6 லட்சத்து 72 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம் படேல், பிரஜ்வல் ரேவண்ணாவை 42 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாசன் என்பது முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் தலைவருமான தேவகவுடாவின் சொந்த மாவட்டமாகும். மேலும் ஹாசன் தொகுதி எப்போதுமே ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. 2004, 2009, 2014 தேர்தல்களில் தேவகவுடா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2019ல் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக அவர் தொகுதியை விட்டு கொடுத்தார். 2019ல் ஹாசனில் வென்ற பிரஜ்வல் ரேவண்ணா தற்போது தோல்வியடைந்தார்.

முன்னதாக இந்த தொகுதியில் கடந்த 1999ல் காங்கிரஸ் கட்சியின் புட்டசாமி கவுடா வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு 25 ஆண்டுகளுக்கு பிறகு புட்டசாமி கவுடாவின் வாரிசான ஸ்ரேயாஸ் படேல் வெற்றி பெற்றுள்ளார். அதாவது தற்போது ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவை வீழ்த்தி உள்ள ஸ்ரேயாஸ் படேலின் தாத்தா தான் புட்டசாமி கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+