உள்ளூர் வீரர் தேவ்தத் படிக்கலை ஏலத்தில் விட்டது ஏன்? காரணம் சொன்ன ஆர்சிபி இயக்குநர்!
தேவ்தத் படிக்கல் பற்றி ஆர்சிபி அணி இயக்குநர் மைக் ஹசன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கலை ஏலத்தில் விட்டது ஏன் என்று பெங்களூரு அணியின் இயக்குநர் மைக் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பெங்களூரு அணி தரப்பில் ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாட்கேஸ்ட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹசன் பேசியுள்ள பாட்கேஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இளம் வீரரான தேவ்தத் படிக்கல் பற்றி பேசியுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் படிக்கல்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் ஆர்சிபி அணிக்காக பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர். இடதுகை பேட்ஸ்மேனான இவர், ஆர்சிபி அணிக்கான எதிர்கால வீரராக இருப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் மெகா ஏலத்தின் போது தேவ்தத் படிக்கலை ஆர்சிபி அணி எடுக்காமல் விட்டது . மீண்டும் அந்த அணியால் ஏலத்தில் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி படிக்கலை ஏலத்தில் வாங்கியது.

தேவ்தத் படிக்கல் விவகாரம்
இந்த நிலையில் ஆர்சிபி இயக்குநர் மைக் ஹசன் கூறுகையில், தேவ்தத் படிக்கலை மீண்டும் அணியில் வாங்குவதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்தோம். அவருக்கு 7 கோடி ரூபாய் வரைக்கும் ஏலத்தில் செலவிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், எங்களை விட ராஜஸ்தான் அணி 7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால் 7 கோடிக்கு ரூபாய் மேல் ஏலம் சென்றபோது, அதற்கு மேல் ஏலம் கேட்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு மட்டுமே கேட்கமுடியும்.

ஏலத்திற்கு முன்
ஒவ்வொரு முறையில் ஏலத்திற்கு முன்பாக, எங்கள் அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பதை முடிவு செய்வோம். அதன்பின் ஏலத்தில் இருக்கும் வீரர்களை பார்ப்போம். சில வீரர்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் வாங்க வேண்டும் என்று நினைப்போம். அப்படிதான் மேக்ஸ்வெல்லை நாங்கள் வாங்கினோம். ஆனால் ஒவ்வொரு முறை ஏலம் முடியும் போது, சில பேக் அப் வீரர்களை வாங்காமல் இருந்துருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மைக் ஹசனின் செயல்பாடு
ஆர்சிபி அணியின் இயக்குநராக மைக் ஹசன் நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த அணி ஒவ்வொரு முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இம்முறை சொந்த மண்ணில் களமிறங்குவதால் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப ஆர்சிபி அணி திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications