Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டையை கழற்றிவிட்டு நின்ற டு பிளசிஸ்.. உடலில் என்ன அது? அந்த வார்த்தையா? ஆஹா பற்றிக்கொண்ட பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அணியின் கேப்டன் டு பிளசிஸ் உடலில் குத்தி இருக்கும் பச்சை சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது

இதையடுத்து இறங்கிய பெங்களூர் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

RCB skipper DU Plesis bare body pics gets attention: What is the meaning of his arabic tattoo?

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது 13வது ஓவருக்கு பின் டு பிளசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன்சி செய்யாமல் பெவிலியனில் இருந்தார். அவர் மைதானத்தில் காணப்படவே இல்லை.

13வது ஓவருக்கு முன்பாக அவருக்கு உடலில் வயிற்று பகுதியில் கட்டு போடப்பட்டது. வயிற்று பகுதியில் துணியை வைத்து மொத்தமாக கட்டு போடப்பட்டது.

அவர் முதல்நாள் டைவ் அடித்து பயிற்சி எடுத்து இருக்கிறார். அவரின் பயிற்சியின் போது உட்பகுதியில் லேசாக எலும்பில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் கட்டுப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

RCB skipper DU Plesis bare body pics gets attention: What is the meaning of his arabic tattoo?

இதனால் அதன்பின் பேட்டிங் செய்யும் வரை டு பிளசிஸ் மைதானத்திற்கு வரவில்லை. அவரின் உடலில் கட்டுபோடப்பட்ட போது ரசிகர்கள் பலரும் அவர் உடலில் போட்டு இருந்த பல்வேறு டாட்டூக்களை கவனித்தனர்.

அதில் ஒரு பக்கம் அரபி மொழியில் ஒரு வார்த்தை எழுதப்பட்டு இருந்தது. இந்த வார்த்தை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரபி மொழியில் அவர் பசல் என்று எழுதி இருக்கிறார்.

அவரின் உடலில் இருக்கும் அந்த அரபி மொழி வார்த்தையின் அர்த்தம்.. கருணை என்பது ஆகும். அவரின் உடலில் பல அர்த்தமுள்ள டாட்டூக்கள் உள்ளன.

அதில் இந்த கருணை என்ற வார்த்தை தற்போது பெரிய அளவில் பிரபலம் ஆகி உள்ளது.

RCB skipper DU Plesis bare body pics gets attention: What is the meaning of his arabic tattoo?

மேட்ச் விவரம்:தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.

இவர் 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். இன்னொரு பக்கம் ரஹானே வெறும் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம்.

அதேபோல் மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய சிவம் துபேவும் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி 2 சிக்ஸ் அடக்கம்.

இதையடுத்து களமிறங்கிய ராயுடு 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். 9 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 226-6 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் பேட்டிங்:இதையடுத்து இறங்கிய பெங்களூர் அணியில் கோலி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆகாஷ் சிங் பந்தில் அவுட் ஆனார்.

RCB skipper DU Plesis bare body pics gets attention: What is the meaning of his arabic tattoo?

ஆனால் அதன்பின் ஆர்சிபி டாப் ஆர்டர் வீரர்கள் சிஎஸ்கே பவுலர்களை துவைத்து எடுக்க தொடங்கினார்கள். ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் 33 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.

இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் 36 பந்தில் 76 அடித்தார். இதில் 8 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்தார்.

இவர்கள் இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் பெங்களூர் வசம்தான் இருந்தது. 12.1 ஓவரில் தீக்சனா ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆனார். இந்த ஓவரில் விழுந்த விக்கெட்தான் மொத்தமாக மேட்சை மாற்றியது.

இதையடுத்து வரிசையாக விக்கெட் விழ, கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+