மோடி ஒரு வார்த்தை சொல்லட்டும்.. தற்கொலைப்படையாக பாக். செல்ல தயார்.. கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேச்சு
பெங்களூர்: மோடியும், அமித்ஷாவும் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. பாகிஸ்தான் நாட்டுக்குள் தற்கொலைப்படையாக செல்லத் தயார் என்று கர்நாடக அமைச்சர் பிஎஸ் ஜாமீர் கான் பேசியுள்ளார். மோடியும், அமித்ஷாவும் எனக்கு வெடிகுண்டு தர வேண்டும். அதனை நான் கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் தலைவர்களும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க கொரி வலியுறுத்தி வருகிறார்கள்.

அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. இந்திய வான் தடத்தில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதித்தது.
80 சதவீதம் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆப்பு வைக்கும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் ஆடிப்போய் உள்ளது.
வெடிகுண்டை கட்டிக்கொண்டு செல்வேன்
இந்தியா எங்கே அட்டாக் செய்து விடுமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பாகிஸ்தானை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு துணைபோகும் பாகிஸ்தானை சும்மா விடக்கூடாது எனவும் இந்திய அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பிஎஸ் ஜாமீர் கான், பாகிஸ்தானுக்கு தற்கொலைப்படையாக செல்ல தயாராக இருப்பதாக பேசியிருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜாமீர் கான் கூறியதாவது:- இந்தியாவின் எதிரியாக பாகிஸ்தான் எப்போதும் உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி அளித்தால் நான் களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறேன்.
மோடியும் அமித்ஷாவும்
நாங்கள் இந்தியர்கள், இந்துஸ்தானியர்கள், பாகிஸ்தானுடன் நமக்கு எப்போதுமே உறவு இல்லை. நமது எதிரியாகவே அந்த நாடு எப்போதும் உள்ளது. மோடி மற்றும் அமித்ஷா, மத்திய அரசு அனுமதி அளித்தால் போருக்காக பாகிஸ்தான் செல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை மோடியும் அமித்ஷாவும் கொடுக்க வேண்டும். எனது உடலில் அதை கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை தாக்குவேன்" என்றார்.
முன்னதாக இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் வெறும் அரை மணி நேரம் பின் தங்கியிருக்கவில்லை. அரை நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு படைக்கு ஒதுக்கும் நிதி கூட பாகிஸ்தான் நாட்டின் மொத்த நிதி இல்லை என்றும் நீங்கள் மற்றொரு நாட்டிற்குள் சென்று அப்பாவி மக்களை கொலை செய்தால் எந்த ஒரு நாடும் அமைதியாக இருக்காது என்றும் அசாதுதீன் ஓவைசி விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications