சொந்த வீடு கிடையாது.. தூய்மை பணியாளரை தேடிப்போன அமைச்சர் பதவி.. யார் இந்த கர்நாடகா காங்., எம்எல்ஏ?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் மொத்தம் 20 இடங்கள் காலியாக இருந்த நிலையில் நேற்று 19 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் முன்னாள் தூய்மை பணியாளரும், முதல் முறை எம்எல்ஏவாகி சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கேஎஸ் பசவந்தப்பாவை காங்கிரஸ் மேலிடம் அமைச்சராக்கி உள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவரது பின்னணி பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது டிகே சிவக்குமார் முதல்வராக இருந்து வருகிறார். சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் டிகே சிவக்குமார் கடந்த ஜூன் மாதத்தில் முதல்வரானர். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வரானார். மற்ற 12 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

karnataka cabinet congress

கர்நாடகாஅமைச்சரவையில் முதல்வர் உள்பட மொத்தம் 34 பேர் இடம் பெறலாம். ஆனால் 14 பேர் மட்டுமே இருந்தனர். 20 இடங்கள் காலியாக இருந்தன. நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகினர். பெங்களூர் சிவாஜிநகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அர்சத், சாம்ராஜ்பேட்டை எம்எல்ஏ ஜமீர் அகமது கான் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு தான் அதிகமான இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் முறையாக எம்எல்ஏ ஆகி சொந்த வீடு இன்றி தற்போது வரை வாடகை வீட்டில் வசித்து வருமு் கேஎஸ் பசவந்தப்பா என்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா சட்டசபை தொகுதியில் 2018 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த 2023 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாயகொண்டா சட்டசபை தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். இவர் தற்போது எஸ்எஸ் படாவனேயில் வசித்து வருகிறார். எம்எல்ஏ ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு சொந்த வீடு இல்லை. தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

karnataka cabinet congress

காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடம் சகஜமாக பழகும் தன்மை கொண்டவராக உள்ளார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவருக்கு காங்கிரஸ் மேலிடம் அமைச்சர் பதவியை வழங்கி உள்ளது. இவர் டிகே சிவக்குமாரின் தீவிர ஆதரவாளராக உள்ளார். எஸ்சி சமுதாயத்தை சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சர் எச். ஆஞ்சநேயாவின் நெருங்கிய உறவினர் ஆவார்.

அமைச்சர் கேஎஸ் பசவந்தப்பாவின் தந்தை பெயர் பைல்வான் சங்கப்பா. தாய் பெயர் ஹனமக்கா. தந்தை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்தார். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. இதில் 3வது குழந்தையாக கேஎஸ் பசவந்தப்பா பிறந்தார். இவர் தொடக்கத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்தார். அதன்பிறகு சைக்கிள் ஸ்டேண்ட் நிறுத்துமிடம், கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்த நிலையில் காங்கிரறாஸில் இணைந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தார். இவர் இதற்கு முன்பு தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் தற்போது அமைச்சராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+