Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை.. முஸ்லீம்களுக்கான 4% ரத்து பற்றி அமித்ஷா!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை, காங்கிரஸ் அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை வரவேற்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் சூழலில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், காங்கிரஸ் கட்சி அரசியல் லாபத்திற்காக வழங்கிய இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்று பாஜக மும்முரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் அடிக்கடி கர்நாடகாவுக்கு வந்து செல்கின்றனர்.

 முஸ்லீம் இட ஒதுக்கீடு ரத்து

முஸ்லீம் இட ஒதுக்கீடு ரத்து

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு, சிறுபான்மையினருக்கான 4 சதவீத ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல்

முஸ்லீம்களுக்கு தனியாக வழங்கப்பட்ட 4% இட ஒதுக்கீடு ரத்தாவதால், அவர்கள் 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என அமைச்சரவை உறுதி செய்தது. சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு இனி ஒக்கலிகர் சமூகத்தவருக்கு 2 சதவீதம், லிங்காயத்துகளுக்கு 2 சதவீதம் என அதிகரித்து வழங்கப்படும் என்றும் கர்நாடகா பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

 அமித்ஷா வரவேற்பு

அமித்ஷா வரவேற்பு

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். கர்நாடகாவின் பிதார் மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு புதிய உள் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கியுள்ளது.

 மத அடிப்படையில் இடஒதுக்கீடு

மத அடிப்படையில் இடஒதுக்கீடு

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லாது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இந்த காங்கிரஸ் அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது.
பாஜக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, வொக்கலிகாக்களுக்கு இரண்டு சதவீதமும், லிங்காயத்துகளுக்கு இரண்டு சதவீதமும் வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+